மகளிர் பிரிமியர் லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் – உத்தரபிரதேச அணிகள் நேருக்கு நேர் மோதின.


டெல்லி - உத்தரபிரதேசம்:


இந்த போட்டியில் உத்தரபிரதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக கேப்டன் ஹீலி – கிரண் நவ்கிரே களமிறங்கினர். ஹேலி நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய நிலையில், கிரண் 5 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த தீப்தி ஷர்மா – ஹேலி நிதானமாக ஆடினர். டெல்லி அணியினர் கட்டுப்பாட்டுடன் பந்துவீசியதால் இவர்களால் ரன்களை அதிரடியாக சேர்க்க இயலவில்லை.


139 ரன்கள் இலக்கு:


சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஹீலி 30 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு உத்தரபிரதேச அணி சரியத் தொடங்கியது. உத்தரபிரதேச அணிக்காக தீப்தி மட்டும் தனி ஆளாக போராட, தஹிலா 3 ரன்களுக்கும், கிரேஸ் 14 ரன்களுக்கும் அவுட்டாக பின்வரிசை வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் அவுட்டானார்கள்.  தனி ஆளாக போராடிய தீப்தி ஷர்மா 40 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 59 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் உத்தரபிரதேச அணி 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெல்லி அணியில் டிடாஸ் சாது, ராதா யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


மெக் லேனிங் அதிரடி:


139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு கேப்டன் மெக் லேனிங் அதிரடியான தொடக்கத்தை அளித்தார். அவர் பவுண்டரிகளாக விளாச மற்றொரு அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா 15 ரன்களுக்கு அவுட்டானார். ஆலிஸ் 15 ரன்களுக்கு அவுட்டாக மெக் லேனிங் அதிரடியால் டெல்லி இலக்கை நோக்கி விறுவிறுப்பாக முன்னேறிக் கொண்டிருந்தது. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த மெக் லேனிங் 46 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.


அடுத்து மறுமுனையில் அதிரடி காட்டிக் கொண்டிருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15 பந்துகளில் 1 சிக்ஸருடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். ஜெமிமா ஆட்டமிழந்தபோது டெல்லி அணி 17.1 ஓவர்களில் 112 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்தது. இதனால், எளிதில் அடுத்த ஓவர்களில் இலக்கை அடைந்து விடும் என்ற டெல்லியின் கனவை தீப்தி ஷர்மாவும், கிரேஸ் ஹாரீசும் சிதைத்தனர்.


டெல்லி த்ரில் வெற்றி:


தீப்தி ஷர்மா வீசிய 19வது ஓவரில் முதல் பந்தில் சதர்லாண்ட் 6 ரன்களில் போல்டாக, 2வது பந்தில் அருந்ததி ராய் டக் அவுட்டானார். அதே ஓவரில் சிகா பாண்டா தீப்தி ஷர்மாவிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அந்த ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கடைசி ஓவரை கிரேஸ் வீசினார். ஒரு ஓவரில் 9 ரன்கள் டெல்லி வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 3வது பந்தில் உத்தபிரதேசத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த ராதா யாதவ் போல்டானார். அடுத்த பந்தில் மறுமுனையில் பவுண்டரி சிக்ஸர் விளாசி அச்சுறுத்திக் கொண்டிருந்த ஜெஸ் ரன் அவுட்டானார். அவர் 5 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11 ரன்களுக்கு அவுட்டானார். இதனால், கடைசி 2 பந்தில் 2 ரன்கள் டெல்லிக்கு தேவைப்பட்டது. கையில் 1 விக்கெட் மட்டுமே இருந்தது. ஆனால், 5வது பந்தில் டிடாஸ் சாது அடித்த பந்தை டேனியல் வ்யாட் கேட்ச் பிடித்ததால் டெல்லி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், உத்தரபிரதேச அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


மேலும் படிக்க: IPL Records: KKR-க்கு எதிரான போட்டி.. பரபரப்பின் உச்சம்.. கடைசி பந்தில் ஹிட்மேன் ரோஹித் சர்மா செய்த வரலாற்று சம்பவம்!


மேலும் படிக்க: ND VS ENG Test Day 2 Highlights: ரோகித், கில் அபார சதம்! படிக்கல், சர்பராஸ் கான் அபாரம்- 255 ரன்கள் முன்னிலையில் இந்தியா