இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகளை பார்ப்பதற்கு என்றே கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஐ.பி.எல். போட்டிகளை பெண்களுக்கும் நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. இதையடுத்து, 2023ம் ஆண்டு முதல் மகளிர் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.


மகளிர் ஐ.பி.எல்.


நடப்பாண்டிற்கான முதல் சீசனுக்கான ஐ.பி.எல் ஏலம் வரும் 13-ந் தேதி நடைபெற உள்ளது. மும்பையில் நடைபெற உள்ள இந்த ஏலத்தில் மொத்தம் 1500 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். முதல் ஐ.பி.எல். சீசன் என்பதால் மொத்தம் 5 அணிகள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், மகளிர் ஐ.பி.எல். போட்டி எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.


அதாவது, மகளிர் ஐ.பி.எல். போட்டிகள் வரும் மார்ச் 4-ந் தேதி முதல் மார்ச் 26-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பி.சி.சி.ஐ. சார்பில் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க உள்ள 5 அணிகளுக்கும் இன்று மின்னஞ்சல் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஏலத்தில் 1500 வீராங்கனைகள்:


மொத்தம் 1500 வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த ஏலத்தில் 90 வீராங்கனைகள் மட்டுமே தேர்வாக வாய்ப்புள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களது அணிக்காக ஏலத்தில் 15 முதல் 18 வீராங்கனைகளை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.  மகளிர் ஐ,பி.எல். போட்டிகள் முழுவதும் மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்திலும், டி.ஒய். பாட்டீல் மைதானத்திலும்தான் நடக்க உள்ளன.


தற்போது இந்திய அணி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் ஆடி வருகிறது. உலகக்கோப்பை டி20 தொடர் வரும் பிப்ரவரி 26-ந் தேதி நிறைவடைய உள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் இந்த தொடர் முடிவடைந்த 8 நாட்களில் மகளிர் ஐ.பி.எல். தொடர் தொடங்க உள்ளது. முதன்முறையாக இந்தியாவில் பெண்களுக்கான ஐ.பி.எல். தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.


5 அணிகள்:


ஏற்கனவே இந்த தொடருக்கான ஒளிபரப்பு உரிமை வியாகாம் நிறுவனம் 951 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. அதாவது 2023 முதல் 2027 வரை காலகட்டத்திற்கு இந்த ஒளிபரப்பு உரிமம் அடங்கும். மகளிர் ஐ,பி.எல். ஏலத்தில் பங்கேற்க உள்ள அணிகளை அதானி குழுமம், இந்தியாவின் குழுமம், ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமம், ஜே.எஸ்.டபுள்யூ ஜி.எம்.ஆர். கிரிக்கெட் குழுமம், கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் குழுமம் வாங்கியுள்ளனர்.


 இனி வரும் காலங்களில் இந்த 5 அணிகள் என்பது அதிகரிக்கப்பட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இப்போது முதல் ஏலத்தில் பங்கேற்க உள்ள அணிகள் தங்களது அணியை பலப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளன. மும்பை அணி டி20 மற்றும் உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து முன்னாள் கேப்டன் எட்வர்ட்சை பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்தியாவின் அசத்தல் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


மேலும் படிக்க: IND vs AUS Test: ஆஸ்திரேலியாவிற்கு மரண அடி கொடுத்த இந்தியாவின் மறக்க முடியாத வெற்றிகள்..! ஓர் அலசல்


மேலும் படிக்க: Womens T20 World Cup: ஆஸ்திரேலியாவை புரட்டியெடுக்க புயலாய் களமிறங்கும் இந்திய அணி.. பயிற்சி ஆட்டத்தில் இன்று மோதல்..!