ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து இந்தியாவுக்காக அறிமுகமான சினேகா தீப்தியின் கேரியர் அந்த அளவுக்கு உயரவில்லை என்றாலும் மிகவும் திறமையான வீராங்கனை என்று பலரிடம் இருந்து பெயர் பெற்றவர் ஆவர். ஆந்திராவைச் சேர்ந்த தீப்தி, 2013 இல் பங்களாதேஷுக்கு எதிராக மந்தனாவுடன் இணைந்து இந்தியாவில் அறிமுகமானபோது தனது கிரிக்கெட் வாழ்க்கை சரியான திசையில் செல்கிறது என்று நினைத்தார். ஆனால் இரண்டு WT20I கள் மற்றும் ஒரு WODI விளையாடிய உடனேயே, தேசிய அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு முன்பே, மூன்றே போட்டிகளில் அவரது இடத்தை இழந்தார். இருப்பினும், அவர் தனது மாநில அணியான ஆந்திராவை இடைப்பட்ட ஆண்டுகளில் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தினார் மற்றும் கடைசியாக அவர்களுக்காக நவம்பர் 2021 இல் விளையாடினார். இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும், மகளிர் பிரீமியர் லீக் (WPL) அவரது வாழ்க்கையை புதுப்பிக்க மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளது. மேலும் இந்திய அணி ஜெர்சியை மீண்டும் அணிய வேண்டும் என்ற கனவையும் பிதுப்பித்துள்ளது.



மீண்டும் உத்வேகம் தந்த WPL


எனவே, WPL ஏலத்தின் அறிவிப்புடன் வாய்ப்பு வந்ததும், தீப்தி அதை முயற்சி செய்ய முடிவு செய்தார். 26 வயதான அவரை டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.30 லட்சத்திற்கு தேர்வு செய்தது. இப்போது இரண்டு வயது குழந்தை கிரிவாவின் தாயான தீப்தி டெல்லி உரிமையாளருடன் மீண்டும் பயிற்சி பெற்று, மார்ச் 4 அன்று WPL தொடங்குவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார். டெல்லி கேபிடல்ஸ் டிவியில் தீப்தி வெளியிட்ட உணர்ச்சிகரமான வீடியோவில், WPL முகாமில் கலந்து கொள்ள தனது குழந்தை கிரிவாவை விட்டுச் செல்வது எவ்வளவு கடினம் என்பதை 26 வயதான அவர் பகிர்ந்து கொண்டார்.


தொடர்புடைய செய்திகள்: Crime : வாட்சப் மூலம் பரப்பிய படங்கள்.. முன்னாள் காதலன் இழிசெயல்.. பொறியியல் மாணவி தற்கொலை.. பகீர் பின்னணி..


மகளை மிஸ் செய்கிறேன்


“நான் (மும்பையில் உள்ள டீம் ஹோட்டலுக்கு) கிளம்பும் போது அவள் (கிரிவா) அழ ஆரம்பித்தாள். அப்போது, ‘நான் போகவேண்டுமா?’ என்று உணர்ந்தேன், எனக்கு கிரிக்கெட், குடும்பம் இரண்டுமே முக்கியம். தொழில் வாழ்க்கையும் மிகவும் முக்கியமானது, அதனால் நான் இவ்வளவு தூரம் வந்திருப்பதால் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று நினைத்தேன்," என்ற அவர் மும்பையில் உள்ள முகாமுக்குச் செல்வதற்கு முன், தனது கணவரிடம் கிரிவாவை கவனித்துக்கொள்ள சொன்னதாக உறுதியளித்தார்.



இந்திய அணி ஜெர்சியை அணிய வேண்டும் 


"நான் விளையாட்டை முழுமையாக அனுபவிக்க வேண்டும். நான் இங்கே (WPL இல்) சிறப்பாகச் செயல்பட்டால் இந்திய அணியில் இடம்பெற ஒரு வாய்ப்பு என்று எனக்குத் தெரியும். நான் மற்றவர்களை ஊக்குவிக்கவும் மற்ற வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருக்க விரும்புகிறேன். மேலும் 'அவரால் அதைச் செய்ய முடிந்தால், நாமும் செய்ய முடியும்' என்று பலர் இங்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு இது மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் என் கணவர் 'நீ விளையாடு, நான் குழந்தையை பார்த்துக்கொள்வேன்' என்று கூறி ஆறுதல் தந்தார், "என்றார்.


மும்பை ஹோட்டலுக்குச் சென்ற ஐந்து நிமிடங்களில், தீப்தி கிரிவாவின் நலம் பற்றி விசாரிக்க தனது கணவரை அழைத்தார். "அழைப்பில், அவள் சிரித்தாள். தெலுங்கில், ‘பாகா ஆடு’ அதாவது 'நன்றாக விளையாடு’ என்று கூறினார். தீப்திக்கு மந்தனாவைப் போல பல கோடி ரூபாய் கிடைத்திருக்காது. ஆனால் கிரிக்கெட் மைதானத்திற்கு திரும்பியதன் திருப்தியும் பெரு வாய்ப்பும் அவருக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.