மகளிர் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் உத்தர பிரதேச வாரியர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. போட்டித் தொடரின் 10 போட்டியான இது மும்பை பார்பவுர்ணி மைதானத்தில் நடைபெற்றது. 


டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி பேட்டின் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் உத்தர பிரதேச அணி 159 ரன்கள் சேர்த்தது. இந்த அணியின் சார்பில், அலீசா 58 ரன்களும் மெக்ரத் 50 ரன்களும் சேர்த்தனர்.  மும்பை அணி சார்பில், இஷாக் மூன்று விக்கெட்டுகளும் அமீலா கெர் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 


மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்): யாஸ்திகா பாட்டியா(விக்கெட் கீப்பர்), ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), தாரா குஜ்ஜார், அமெலியா கெர், இஸ்ஸி வோங், அமன்ஜோத் கவுர், ஹுமைரா காசி, ஜிந்திமணி கலிதா, சைகா இஷாக்


உத்தர பிரதேச வாரியர்ஸ் (பிளேயிங் லெவன்) : தேவிகா வைத்யா, அலிசா ஹீலி(விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), ஸ்வேதா செஹ்ராவத், கிரண் நவ்கிரே, தஹ்லியா மெக்ராத், தீப்தி சர்மா, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லெஸ்டோன், ஷப்னிம் இஸ்மாயில், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கயக்வாட்