IND vs AUS 4th Test Day 4 Highlights: 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 571 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை விட 91 ரன்கள் அதிகமாக எடுத்துள்ளது. 


இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி தொடரில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 


நான்காவது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 571 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லைன் மற்றும் மார்ஃபி தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.  அதேபோல் அஸ்திரேலிய்ட அணி சார்பில் பேட்டிங்கில், கவாஜா 180 ரன்களும், கேமரூன் கிரீன் 114 ரன்களும் குவித்தனர். அதேபோல்,  இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் சார்பில் பேட்டிங்கில் சுப்மன் கில் 128 ரன்களும் விராட் கோலி 186 ரன்களும் குவித்து இருந்தனர். பவுலிங்கில் இந்திய அணியின் சார்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் சேர்த்துள்ளது. இந்நிலையில்  நான்காவது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 88 ரன்கள் பின்தங்கியுள்ளது. 


சாதனைகளை குவித்த முதல் இன்னிங்ஸ்


இந்த போட்டி தற்போது உள்ள நிலைமையைப் பார்த்தால் டிரா ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இருப்பினும், இந்திய அணி தரப்பில் பேட்டிங்கில் விராட் கோலியும் மற்றும் பவுலிங்கில் அஸ்வினும் சாதனைகளை படைத்துள்ளனர். 


அஸ்வின் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலமாக சொந்த மண்ணில் 26வது முறையாக 5 அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றி சொந்த மண்ணில் அதிக முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனை அனில் கும்ப்ளே வசம் இருந்தது. 


இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் – கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக அனில் கும்ப்ளே இருந்தார். அவர்  111 விக்கெட்டுகளுடன்  முதல் இடத்தில் இருந்தார்.  இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை அள்ளியதன் மூலம் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையையும் தன்வசமாக்கியுள்ளார். அவர் 113 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச அளவில் 7வது இடத்தில் உள்ளார். 


அதேபோல், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி சதம்  அடித்துள்ளார். இறுதியாக 2013ல் சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்தார். அதாவது கோலி தனது கேரியரை தொடங்கிய நாட்களில் சதம் அடித்த பிறகு, இன்று இந்திய மண்ணில் கோலி இந்த சாதனையை எட்டியுள்ளார். கிட்டத்தட்ட 1200 நாட்களுக்குப் பிறகு, கோலி டெஸ்ட் சதம் அடித்தார். இதற்கு முன்னர், நவம்பர் 22, 2019 அன்று, வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்து இருந்தார்.  சமீபத்திய சதத்துக்காக அவர் கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் காத்திருந்திருக்கிறார்.