ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளைப் போலவே டெஸ்ட் போட்டிகளிலும் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்தி வருகிறது. முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து அணி கைப்பற்றியதை அடுத்து, இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
2021-2023ம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. தற்போது வெளியிட்டுள்ளது. மான்செஸ்டரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து இந்த புதிய பட்டியல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்க அணி தோல்வி அடைந்ததையடுத்து, ஆஸ்திரேலிய அணி 70 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணி 66.67 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இலங்கை 53.33 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியா 52.08 சதவீதத்துடன் நான்காவது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க : Asia Cup IND vs PAK : ஹர்திக், ஜடேஜா அபார பேட்டிங்..! பாகிஸ்தானை பழிதீர்த்த இந்தியா..! கடைசி ஓவரில் திரில் வெற்றி..!
பாகிஸ்தான் அணி 51.85 சதவீதத்துடன் 5வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 50 சதவீதத்துடன் 6வது இடத்திலும், இங்கிலாந்து அணி 35.19 சதவீதத்துடன் 7வது இடத்திலும், நடப்பு சாம்பியன் நியூசிலாந்து அணி 25.93 சதவீதத்துடன் 8வது இடத்திலும், வங்கதேசம் 13.33 சதவீதத்துடன் 9வது இடத்திலும் உள்ளது.
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி அடுத்தாண்டுதான் நடைபெறும் என்பதால் அதற்குள் இந்த தரவரிசைப் பட்டியலில் மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. இதனால், முதல் இரு இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க தங்களது இடங்களை தக்கவைக்கவும், அடுத்த இடங்களில் உள்ள இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தரவரிசையில் முன்னேறவும் போராடும் என்பதால் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித்தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மேலும் படிக்க : IND vs PAK, Asia Cup Win: ஒளியே வழியாக மலையே படியாக..இனிஒரு விதி செய்வோம்.. இந்திய வெற்றியை கொண்டாடும் மக்கள்
மேலும் படிக்க : IND vs PAK: தர்மம் தோற்காதே ஆளும் காவலனே... ஹர்திக் பாண்ட்யாவிற்கு தலை வணங்கிய கார்த்திக்.. வைரல் படம்..