ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி புவனேஸ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி(35),ஜடேஜா(35)மற்றும் ஹர்திக் பாண்ட்யா(33*) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்காரணமாக இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. 


இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியை இந்திய ரசிகர்கள் பல்வேறு மாநிலங்கள் கொண்டாடி வருகின்றனர். மகாராஷ்டிராவின் நாக்பூர் பகுதியில் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதைத் தொடர்ந்து மேற்கு வங்கம் மாநிலத்தின் சிலிகுரி பகுதியிலும் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் செய்து கொண்டாடினர். அதேபோல் மத்திய பிரதேசத்திலும் இந்தியா வெற்றியை பல ரசிகர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடினர். 






2021ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்தத் தோல்விக்கு தற்போது இந்திய அணி பழி தீர்த்து கொண்டதாக பல ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். 






ஆசிய கோப்பை முழு அட்டவணை:


ஆகஸ்ட் 27: இலங்கை-ஆஃப்கானிஸ்தான்


ஆகஸ்ட் 28: இந்தியா-பாகிஸ்தான்


ஆகஸ்ட் 30: பங்களாதேஷ்-ஆஃப்கானிஸ்தான்


ஆகஸ்ட் 31: இந்தியா-ஹாங்காங்


செப்டம்பர் 1: இலங்கை-பங்களாதேஷ்


செப்டம்பர் 2: பாகிஸ்தான் -ஹாங்காங்






சூப்பர் 4 சுற்று


செப்டம்பர் 3: பி1-பி2


செப்டம்பர் 4: ஏ1-ஏ2


செப்டம்பர் 6: ஏ1-பி 1


செப்டம்பர் 7: ஏ2-பி2


செப்டம்பர் 8: ஏ1-பி2


 செப்டம்பர் 9: பி1-ஏ2


செப்டம்பர் 11: இறுதிப் போட்டி சூப்பர் 4 முதலிடம்- இரண்டாம் இடம் பிடித்த அணிகள்


அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.