இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கியது. கனமழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்ததால், போட்டி தொடங்க தாமதமானது. நிதானமாக விளையாடிய இந்திய பேட்டர்கள் ரன் குவித்தனர். குறிப்பாக, ஓப்பனர் மயங்க் அகர்வால் சதம் கடந்து அசத்தினார்.
இந்த போட்டியில் சதம் கடந்ததன் மூலம், மயங்க் ஒரு புதிய ரெக்கார்டில் இணைந்திருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக சதம் கடந்த இந்திய அணி வீரர்களின் பட்டியலில் மயங்க் இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். 5 சதங்களுடன் ரோஹித் ஷர்மா முதல் இடத்திலும், 4 சதங்களுடன் மயங்க் இரண்டாவது இடத்திலும், 3 சதங்களுடன் ரஹானே மூன்றாவது இடத்திலும், 2 சதங்களுடன் கோலி நான்காவது இடத்திலும் உள்ளனர்.
இன்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தின் தொடக்க நிமிடங்களில் சாஹா அவுட்டாக, அடுத்து களமிறங்கிய அஷ்வின் அஜாஸ் பந்துவீச்சில் டக்-அவுட்டாகி வெளியேறினார். இதனால், இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், தொடர்ந்து பேட்டிங் செய்த மயங்க், 150 ரன்கள் கடந்து அதிரடி காட்டினார். 17 பவுண்டர்கள், 4 சிக்சர்கள் என 311 பந்துகளில் 150 ரன்கள் கடந்த அவரும் அஜாஸின் சுழலில் சிக்கி அவுட்டாகினார். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்களும், வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தலா 1 சதமும் அடித்திருக்கிறார் மயாங்க்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சதம் அடித்த இந்திய பேட்டர்கள்:
ரோஹித் ஷர்மா | 5 |
மயங்க் அகர்வால் | 4 |
ரஹானே | 3 |
விராட் கோலி | 2 |
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்