இந்தியா அணி தென்னாப்பிரிக்காவிற்கு டிசம்பர் 17 ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது. இந்நிலையில் தான், தென்னாப்பிரிக்காவில் ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவியது. இதைத் தொடர்ந்து அங்கு இந்திய அணி புறப்படுமா என்கிற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இந்திய-தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி உடனான போட்டிகள் நிறைவு பெற்றதும், தென்னாப்பிரிக்காவிற்கு இந்தியா அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு நடந்து வரும் நிலையில், உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றில் அடுத்த கட்ட வைரஸ் ஆன ஓமக்ரான் வைரஸ் தொற்று, முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து உலக நாடுகள் அலர்ட் ஆகி, ஒமக்ரான் வைரஸிற்கு எதிரான பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. தென்னாப்பிரிக்காவின் விமான சேவைக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்தும், கட்டுப்பாடுகளை விதித்தும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் தான், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தென்னாப்பிரிக்கா செல்வதாக இருந்த தொடரை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தலைமையில் சற்று முன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பிசிசிஐ தலைவர் கங்குலி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில், இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த தற்காலிக ஒத்திவைப்பு, நிலைமை சரியான பின் மீண்டும் தொடர் தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்