மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று காலை மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தொடங்கினார். மயங்க் அகவர்வாலின் சதம், கில்லின் 40+ ரன்களால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 221 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்தின் அஜாஸ் படேல் முதல் நாள் ஆட்டத்தில் சரிந்த 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். 


முதல் நாள் முதல் இன்னிங்ஸில் மயங்க் அகர்வாலும், சுப்மன் கில்லும் இணைந்து அற்புதமான தொடக்கத்தை அளித்தனர்.  இந்திய அணி 80 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த ஜோடி பிரிந்த நிலையில், புஜாராவும் டக் அவுட் ஆகியதால் கேப்டன் கோலி களமிறங்கினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய விராட்கோலி  4 பந்துகளில் ரன் ஏதுமின்றி அஜாஸ் படேல் பந்தில் அவுட்டானார்.  அம்பயரின் தவறான அவுட்டால் கோலி மிகுந்த அதிருப்தியுடன் பெவிலியன் திரும்பியதால் இந்த விக்கெட் சர்ச்சையானது. 


கோலியை அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 18 ரன்கள் எடுத்திருந்தபோது அஜாஸ் படேலின் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். அவரை அடுத்து சாஹா களமிறங்கி இருக்கும் நிலையில், மயங்க் அகர்வாலும், சாஹாவும் இரண்டாம் நாள் ஆட்டத்தின் பேட்டிங்கை தொடங்க உள்ளனர். 






மும்பை to மும்பை அஜாஸ் 


1988-ம் ஆண்டு மும்பையில் பிறந்த அஜாஸ் தனக்கு 8 வயதானபோது குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு குடிப்பெயர்ந்துள்ளார். கிரிக்கெட்டை கரியராக தேர்வு செய்ய நினைக்காத அஜாஸ் படேல், தனது 25வது வயதில் உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகளில் ஒன்றுக்கு விளையாடி வருவதை அவரே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். 


2018-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் விளையாடியதன் மூலம் டி20,ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அஜாஸுக்கு, தனது கிரிக்கெட் பயணத்தில் மும்பை டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மறக்க முடியாததாக அமைந்திருக்கிறது. 


போட்டி தொடங்கும் முன்பு இது குறித்து பேசிய அஜாஸ், “மும்பையில் தரை இறங்கியபோது மிகவும் எமோஷ்னலாக உணர்ந்தேன். நிறைய முறை விடுமுறைகளின்போது மும்பை வந்திருக்கிறேன். ஆனால், டெஸ்ட் போட்டி விளையாடுவதற்காக மும்பை வந்து இறங்கியது வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. ஆனால், நான் நியூசிலாந்துக்காக விளையாட வந்திருக்கிறேன்” என தெரிவித்தார். 


நியூசிலாந்துக்காக விளையாடினாலும், முதல் முறை சொந்த ஊரில் களமிறங்கிய அஜாஸ் படேலுக்கு மும்பையில் இருந்த அவரது குடும்பத்தினர் மைதானத்துக்கு நேரடியாக வந்து உற்சாகம் அளித்தனர்.  மும்பையில் தான் பிறந்து நேற்று மும்பை வான்கடேவில் நான்கு விக்கெட்டுகளை எடுத்த அஜாஸுக்கு இது ஒரு சிறப்பான டெஸ்ட் இன்னிங்ஸ்!  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண