உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 முதல் 15 வரை நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐசிசி)அறிவித்துள்ளது.


இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "2025ஆம் ஆண்டு ஜூன் 11 முதல் 15 வரை ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் இறுதி நாளில் மழை, புயல் உள்ளிட்ட பேரிடர்கள் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டால் ஜூன் 16ஆம் தேதி ரிசர்வ் டே வாக கருதப்பட்டு போட்டி தொடரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. முன்னதாக 2021ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சவுதாம்டனில் நடந்தது குறிப்பிடத்தக்கது. 


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்:


இந்தியா - 68.52 சதவீதம்


ஆஸ்திரேலியா - 62.50 சதவீதம்


நியூசிலாந்து - 50.00 சதவீதம் 


இங்கிலாந்து - 45.00 சதவீதம்






தென் ஆப்பிரிக்கா - 38 சதவீதம்


வங்கதேசம் - 35.00 சதவீதம்


இலங்கை - 33.33 சதவீதம் 


பாகிஸ்தான் - 22.22 சதவீதம்


வெஸ்ட் இண்டீஸ் - 18.52 சதவீதம்


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளுக்காக ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தைப் பதிவுசெய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஐசிசி சி இ ஓ கூறியுள்ளார். மேலும், இந்த போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாய் அமையும் என்றும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


மேலும் படிக்க: Paris Paralympics 2024: பாரீஸ் பாராலிம்பிக்.. பதக்க வாய்ப்பு உள்ளதா? இந்தியா விளையாடும் போட்டிகள் என்ன?


 


மேலும் படிக்க: Happy Birthday Mohammad Shami: இந்தியாவின் எல்லைச்சாமி.. முகமது ஷமியின் டாப் 5 பெர்பாமன்ஸ்