2021- 23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் சுற்றுகள் ஒரு வழியாக நிறைவறைந்த நிலையில், இந்த தொடரின் சிறந்த ஐந்து பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சை ஐசிசி பட்டியலிட்டு காண்பித்துள்ளது. 


இந்த பட்டியலில் இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேலின் 10 விக்கெட்டுக்கள் முதலிடத்தில் உள்ளது. 


அஜாஸ் படேல்- 10/119 vs இந்தியா (மும்பை, 2021)


கடந்த 2021 டிசம்பரில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மும்பை மைதானத்தில் மோதின. மும்பை டெஸ்டில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அப்போது இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்கள் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். ஜிம் லேக்கர் (10/53 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) மற்றும் அனில் கும்ப்ளே (பாகிஸ்தானுக்கு எதிராக 10/84) ஆகியோர் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். 


அதேபோல், இரண்டாவது இன்னிங்ஸிலும் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இருப்பினும், இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


சஜித் கான்- 8/42 vs வங்கதேசம் (மிர்பூர், 2021)


கடந்த 2021 மிர்பூரில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சஜித் கான் 8 விக்கெட்களை வீழ்த்தினார். 8/42 எடுத்ததன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பாகிஸ்தான் பந்துவீச்சாளரின் நான்காவது சிறந்த பந்துவீச்சாக இது பதிவானது.


நாதன் லியோன்- 8/64 vs இந்தியா (இந்தூர், 2023)


சமீபத்தில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியின் டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 8/64  விக்கெட்களை கைப்பற்றினார். அவரது விக்கெட்டுகளில் கில், ரோஹித் சர்மா, புஜாரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் அடங்குவர். 


மாட் ஹென்றி- 7/23 vs தென்னாப்பிரிக்கா (கிறிஸ்ட்சர்ச், 2022)


கடந்த 2022 ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நியூசிலாந்து  வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி முதல் இன்னிங்ஸில் 7/23 என்று வீசி தென்னாப்பிரிக்கா ரசிகர்களை அதிர செய்தார். ஹென்றி இரண்டாவது இன்னிங்ஸில் 2/32 எடுத்தார், நியூசிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


கேசவ் மகாராஜ்- 7/32 v2 வங்கதேசம்  (டர்பன், 2022)


கடந்த 2022 டர்பனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கேசவ் மகாராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தவில்லை. அப்படியே மாறாக, இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்களை வீழ்த்தி பிரமிக்க செய்தார்.