பெங்களூரில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது.


இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு 5வது இடத்தில் இருந்த இந்திய அணி இந்த வெற்றி மூலம் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி முதலிடத்தில் இருந்தாலும், சதவீத அடிப்படையில் இந்திய அணி நான்காவது இடத்தில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு சதவீதமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.




இந்திய அணி 58.33 சதவீதத்துடன் நான்காவது இடத்தில் உள்ளது. 77 புள்ளிகளை பெற்றுள்ளது. 2021 – 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டியில் இந்திய அணி இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. அவற்றில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 2 போட்டிகளை டிரா செய்துள்ளது. 4 தொடர்களில் பங்கேற்றுள்ளது.  


தற்போதுள்ள புள்ளி பட்டியலின் அடிப்படையில் ஆஸ்திரேலியா 77.77 சதவீதத்துடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 56 புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணி 4 வெற்றிகளை பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிரா ஆகியுள்ளது. 2 தொடர்களில் பங்கேற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. அந்த அணி 66.66 சதவீதம் பெற்றுள்ளது. 40 புள்ளிகள் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியும், 1 போட்டியை டிராவும் செய்துள்ளது. 3 தொடரில் பங்கேற்றுள்ளது.




மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது. அந்த அணி 60 சதவீதம் பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க அணி 36 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி 3 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. 2 தொடரில் பங்கேற்றுள்ளது. நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.


ஐந்தாவது இடத்தில் இலங்கை அணியும், ஆறாவது இடத்தில் நியூசிலாந்து அணியும், ஏழாவது இடத்தில் வங்காளதேசமும், 8வது இடத்தில் மேற்கிந்திய தீவுகளும், 9வது இடத்தில் இங்கிலாந்தும் உள்ளது. ஆஷஸ் டெஸ்ட் தொடர் தோல்வியால் இங்கிலாந்திற்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அணி 11.67 சதவீதத்துடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 14 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளனர். 1 டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்ற இங்கிலாந்து 6 டெஸ்டில் தோல்வி அடைந்துள்ளனர். 3 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளது. 3 தொடர்களில் பங்கேற்றுள்ளனர். 10 பெனால்டி ஓவர்களை பெற்றதும் இங்கிலாந்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண