உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்காக ஜிம்பாப்வேக்கு சென்ற இலங்கை கிரிக்கெட் அணி, புலவாயோவில் உள்ள ஹோட்டலில் செக்-இன் செய்ய காத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பிரச்சினைகள் உடனடியாக சரிபார்க்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் உடனடியாக தகவல் தெரிவித்தது. 


இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஹோட்டல் பால்கேனி மற்றும் மாடியில் படுத்திருக்கும் பல படங்கள் சர்ச்சையை கிளப்பியது. இந்த புகைப்படத்தை இலங்கை அணியை சேர்ந்த இரண்டு கிரிக்கெட் வீர்ரர்களான மஹீஷ் தீக்‌ஷனா மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். பின்னர், இந்த கிரிக்கெட் வீரர்களும் தங்கள் தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்குகளில் இருந்து படங்களை நீக்கினர். 


இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “ இன்று நண்பகல் இலங்கை அணி புலவாயோவில் உள்ள ஹோட்டலுக்கு சென்றது. அப்போது, இலங்கை அணி உள்ளே சென்றபோது, மற்றொரு தேசிய கிரிக்கெட் அணி செக்-இன் செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில் சில இலங்கை அணி வீரர்கள் செக்-இன் செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்த விஷயத்தை ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்த பின்னர், குறுகிய காலத்திற்குள் சிக்கலை சரி செய்தனர்” என்று தெரிவித்தது. 



ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்று ஜிம்பாப்வேயில் நடைபெறுகிறது. அதனால்தான் இலங்கை அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சென்றது. 


உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகள் ஜூன் 18-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் தொடக்க போட்டியில் நேபாளம் - ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. இலங்கை தனது முதல் போட்டியில் ஜூன் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸை (யுஏஇ) எதிர்கொள்கிறது. அதை தொடர்ந்து ஓமன், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டிகளிலும் இலங்கை அணி விளையாட இருக்கிறது. 


இந்த தகுதிச்சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும். 


தகுதிச்சுற்றில் பங்கேற்கும் இலங்கை அணி விவரம்: 


தசுன் ஷனக (கேப்டன்), குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்ன, பதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, லஹிரு திஷான, மஹீஷ் தீக் குமார, மஹீஷ் தீக் குமார


 முன்னதாக, ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணியில் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கி, இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.