2023 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கான தகுதிச் சுற்று விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், குரூப் ஏ வில் இருந்து 3 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேற உறுதியாகியுள்ள நிலையில் குரூப் பி யில் இன்னும் எந்த அணியும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் தங்களது கால்களை வைக்கவில்லை. 


உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள்


குழு A இல், மேற்கிந்திய தீவுகள், நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே சூப்பர் சிக்ஸ் கட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளன. இருப்பினும் நெதர்லாந்து மற்றும் மேற்கிந்தியதீவுகள் ஜூன் 26 அன்று மோத இருப்பதால், அந்த கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியை வென்று நல்ல நிலைக்கு செல்ல முயற்சி செய்யும். குழு B இல், இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் 2 போட்டிகளில் விளையாடி 2 ஐயும் வென்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இன்று நடைபெறும் இலங்கை, அயர்லாந்து போட்டியில் இலங்கை வென்றால், அயர்லாந்து வெளியில் செல்வதும், இலங்கை உள்ளே செல்வதும் உறுதியாகும். கிட்டத்தட்ட UAE 3 போட்டிகளில் ஆடி இப்போதே வெளியேறிவிட்ட நிலையில், இன்றைய போட்டியில் இலங்கை அணி வென்றால், குரூப் பி-இன் 3 அணிகளும் உறுதியாகிவிடும்.



முன்னிலையில் இருக்கும் 4 அணிகள்


மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே இரண்டும் குரூப் A இலிருந்து தகுதி பெற்றுள்ளன, ஆனால் ஜூன் 24 அன்று நடந்த மோதலில் ஜிம்பாப்வேயின் வெற்றியானது சூப்பர் சிக்ஸ் கட்டத்திற்கு முன்னேற இரண்டு முக்கியமான புள்ளிகளை அவர்களுக்கு வழங்கியுள்ளது. ஜூன் 27 அன்று குழு ஆட்டத்தின் கடைசி நாளில் சந்திக்கும் போது இலங்கையும் ஸ்காட்லாந்தும் இதேபோன்ற வாய்ப்பை எதிர்கொள்கின்றன. இருப்பினும் இரு அணிகளுக்கும் அதற்கு முன்னேற சூப்பர் சிக்ஸ் கட்டத்திற்கு தகுதி பெற மற்றொரு போட்டி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்: World Cup Qualifiers: முன்னாள் உலக சாம்பியனை மண்ணை கவ்வ வைத்த ஜிம்பாப்வே..! வெ. இண்டீஸ் பரிதாப தோல்வி..!


ஏன் குரூப் ஸ்டேஜ் போட்டிகளின் வெற்றி முக்கியம்?


குரூப் ஸ்டேஜ் போட்டிகளின் வெற்றிகள் மூலம், இங்கு சேகரிக்கப்படும் நெட் ரன் ரேட்டுகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு கொண்டு செல்லப்படும் என்பதால் அணிகள் தகுதி பெற்றாலும், அதிக வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏனெனில் சூப்பர் சிக்ஸ் கட்டத்தின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே நேரடியாக இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பையில் தங்கள் இடத்தைப் பதிவு செய்யும். செமி ஃபைனல் போன்ற தனிப்பட்ட போட்டிகள் கிடையாது.



இன்னும் நிலையாகாமல் இருக்கும் குரூப் பி


இதன் அடிப்படையில், குரூப் 'பி'யில் அணிகளுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஓமன், மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இரண்டு போட்டிகளை வென்று அயர்லாந்திற்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்த நிலையில் அவர்களது ஆட்டம் மற்ற அணிகளை பெரிதாக பாதிக்கக்கூடும். இருப்பினும் இந்த இரு அணிகளும் ஆடாவுள்ள போட்டி இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பா்க்கப்படுகிறது. அந்த போட்டியில் கிடைக்கும் வெற்றி அவர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும். அதே சமயம் வெற்றி பெறாத அயர்லாந்து இப்போது இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்போதைய முடிவுகள் வரை, அமெரிக்கா, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை ஏற்கனவே சூப்பர் சிக்ஸ் இடத்திற்கான போட்டியிலிருந்து வெளியேறியுள்ளன, ஆனால் அந்த அணிகளால் மற்ற அணிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.