முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி உலகின் மிகவும் எளிமையான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே, மேலும் அவரது சிம்லிசிட்டி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இதேபோன்ற ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சிஐஎஸ்எஃப் (மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை) அதிகாரி சதீஷ் பாண்டே, சமீபத்தில் எம்எஸ் தோனியை சந்தித்தபோது நடந்ததை குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


ராஞ்சி விமான நிலையத்தின் விஐபி லவுஞ்சில் தோனியை சந்தித்த தருணத்தை சதீஷ் பாண்டே அதில் குறிப்பிட்டுள்ளார். தோனியை சந்தித்தவுடனேயே, அவரது அரவணைப்பு மற்றும் அவரது கருணையான புன்னகையால் கவரப்பட்டதாக அவர் கூறியுள்ளார். தோனியுடன் பல்வேறு வாழ்க்கைத் திறன்கள் மற்றும் துன்பங்களை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பது குறித்தும் அவர் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.




மேலும், தோனியினுடனான சந்திப்பை அவர் சுட்டிக்காட்டினார், அங்கு முன்னாள் கேப்டன் தான் இந்த தருணத்தில்  மிகவும் சாதராண வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், ஒவ்வொரு கணத்தையும் முழுமையாக அனுபவிக்க விரும்புவதாகவும் கூறினார்.






மேலும், வேகமான உலகின் அழுத்தங்களைக் கையாள்வது குறித்து தோனி பேசினார் என்பதையும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் தனிப்பட்ட வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும், உள் அமைதியைப் பேணுவதற்கு தன்னைப் புதுப்பித்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் தோனி எடுத்துரைத்தார் என்றும் அவர் கூறினார்.


"சவால்களைப் பற்றி விவாதிப்பதில், அவர் தனது அசைக்க முடியாத உணர்வை வெளிப்படுத்தினார் எனவும் 'ஒருபோதும் இழக்காத நம்பிக்கை குணம் ஒரு விளையாட்டு வீரராக என்னுள் உள்ளது.' இந்த அறிக்கை அவரது உறுதியை உள்ளடக்கியது. எங்கள் உரையாடல் முடிவடையும் போது, ​​அவரது விலைமதிப்பற்ற  தோனியின் அறிவுரைக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன்,” என்று CISF அதிகாரி அதில் குறிப்பிட்டுள்ளார். 




"இந்த சந்திப்பு மிகவும் குறுகிய நேரமாக இருந்தது. ஆனால் அதன் தாக்கம் எனக்கு அளவிட முடியாததாக இருந்தது. தோனி சாரின் பணிவு, விவேகம் மற்றும் உண்மையான நடத்தை என் வாழ்வின் கண்ணோட்டத்தில் அழியாத முத்திரையை பதித்துள்ளது. அந்த தருணத்தை அவருடன் பகிர்ந்து கொண்டதற்கு உத்வேகம் மற்றும் ஆசீர்வாதம் ஆகிய இரண்டையும் உணர்ந்து விஐபி லவுஞ்சை விட்டு வெளியேறினேன்” என்று அவர் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளார்.


இந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக தோனியின் ரசிகர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர்