World Cup Cricket Fans: உலகக் கோப்பை கிரிக்கெட்  திருவிழா முடிவடைந்த நிலையில், அடுத்தடுத்து நடைபெற உள்ள தொடர்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.


முடிவடைந்த கிரிக்கெட் திருவிழா:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்று 45 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் லீக் சுற்று, அரையிறுதி மற்ரும் இறுதிப்போட்டி என மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெற்றன. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்று இருந்தாலுமே கூட, ஒரு நல்ல போட்டியை கண்டுகளித்தோம் என்ற எண்ணம் ரசிகர்கள் இடையே இருக்கத் தான் செய்கிறது. அதேநேரம், உலகக் கோப்பை முடிந்து விட்டதே என்ற ஏக்கமும் ரசிகர்களிடையே காணப்படுகிறது. 


ரசிகர்களின் மனநிலை:


நல்ல கிரிக்கெட்டை யார் ஆடினாலும் கொண்டாடும் ரசிகர்கள், இந்தியா உட்பட பல நாடுகளிலும் இருக்கத் தான் செய்கிறார்கள். அதன் வெளிப்பாடாக தான் நடந்து முடிந்த உலகக் கோப்பையிலும், இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகள் பங்கேற்ற போட்டிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவு கிடைத்தது. இதனால், கடந்த 45 நாட்களிலும் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக இருந்தனர். நாள் முழுவதும் கிரிக்கெட் பற்றி பேசி பொழுத கழித்தனர். உதாரணமாக, 



  • காலையில் எழுந்ததும், நேற்றைய போட்டியின் முடிவால் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

  • இன்றைய போட்டியில் எந்தெந்த அணிகள் மோத உள்ளன - அதில் உள்ள ஸ்டார் பிளேயர்கள் யார்

  • போட்டி நடைபெறும் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வது நல்லதா? பீல்டிங் செய்வது நல்லதா? என ஆராய்ச்சி செய்வது

  • வேலையை முடித்துக் கொண்டு அடித்து பிடித்து வீட்டுக்கு வந்த டிவியில் போட்டியை பார்ப்பது

  • ஏதேனும் ஒரு அணி வீரர் சிறப்பாக செயல்பட்டால் யார் இந்த வீரர் என கூகுளில் தேடி படிப்பது

  • நாற்காலியின் முனையில் அமர வைத்து எதிர்பாராத வெற்றியை கண்டு மகிழ்ந்தால் சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ்களை ரயிலாக ஓடவிடுவது

  • கப்பு எங்களுக்கு தான் என அலப்பறை செய்வது

  • தோல்வி அடைந்தால் அதற்கான காரணங்கள் என்ன? கேப்டன் செய்திருக்க வேண்டியது என்னவென ஒரு தீவிரமான விவாதங்களை முன்னெடுப்பது 

  • எதிரணியின் நட்சத்திர வீரர் தங்களுக்கு பிடித்த அணிக்கு எப்படி ஆபத்தானவராக இருக்கக் கூடும் என கணிப்பது

  • ஒவ்வொரு அணிக்கும் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் யார் என்பதை கண்டுபிடிப்பது

  • புள்ளிப்பட்டியலில் முன்னேற எத்தனை வெற்றிகள் அவசியம்

  • அரையிறுதியில் யாரை எதிர்கொண்டால் நமக்கு சாதகமாக  இருக்கும் என, கிரிக்கெட் ரசிகர்கள் பொழுதுபோக்கிற்கு சற்றும் பஞ்சமின்றி கொண்டாடி வந்தனர்.


அடுத்து என்ன? 


இப்போது ஒரே அடியாக உலகக் கோப்பை முடிந்த நிலையில், அடுத்த சில நாட்களுக்கு எந்தவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் இல்லை என்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் இந்த வாரத்திலேயே சில சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் தொடங்க உள்ளன என்ற செய்தி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.



  • இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் வரும் 23ம் தேதி தொடங்க உள்ளது

  • மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி  (டிச. 3 - டிச.22)

  • ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் (டிச.6 - டிச.7)

  • ஜிம்பாபேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அயர்லாந்து (டிச.7 - டிச.17)

  • தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா (டிச.10 - ஜன.7)

  • நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி (டிச.17 - டிச.31)