South Africa T20 WC Final: தாங்காத பாரம்..! டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஹாட்ரிக் தோல்வி, தொடரும் தென் ஆப்ரிக்காவின் பேட் லக்..!

South Africa T20 WC Final: ஆடவர் மற்றும் மகளிர் டி20 உலகக் கோப்பைகளில், ஃபைனல் வரை முன்னேறி தென் ஆப்ரிக்கா அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக தோல்வியடைந்துள்ளது.

Continues below advertisement

South Africa T20 WC Final: மகளிர் டி20 உலகக் கோப்பை ஃபைனலில், தென் ஆப்ரிக்கா அணி மீண்டும் தோல்வியுற்று ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Continues below advertisement

நியூசிலாந்திடம் வீழ்ந்த தென் ஆப்ரிக்கா:

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 எடிஷனின், இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 158 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணியால், 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று, மீண்டும் டி20 உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதன் மூலம், கடந்த ஓராண்டில் மட்டும் தென் ஆப்ரிக்கா ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சேர்ந்து, மூன்று டி20 உலகக் கோப்பைகளில் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும், ஆடவர் மற்றும் மகளிர் என இருதரப்பு தென் ஆப்ரிக்கா அணியாலும், இதுவரை ஒருமுறை கூட உலகக் கோப்பையை வென்றதில்லை என்ற மோசமான வரலாறு தொடர்கிறது.

மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 ஃபைனல்:

கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் மகளிர் டி20 உலகக் கோப்பை நடைபெற்றது. அதன் இறுதிப்போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. உள்ளூரில் நடைபெறுவதால் இந்த முறை நிச்சயம் தென் ஆப்ரிக்கா அணி உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்த 157 ரன்கள் என்ற இலக்கை அடைய முடியாமல் வெறும் 137 ரன்கள் மட்டும் சேர்த்து தோல்வியடைந்தது. இந்த தொடரில் தான் தென் ஆப்ரிக்கா அணி முதல்முறையாக இறுதிப்போட்டி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 ஃபைனல்:

நடப்பு ஆண்டில் மேற்கிந்திய தீவுகளில் ஆடவர் டி20 உலகக் கோப்பை நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து தென் ஆப்ரிக்கா அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 176 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி அபாரமான தொடக்கத்தை பெற்றது. ஒரு கட்டத்தில் அந்த அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதிகட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, ரன் சேர்க்க தவறியதால் வெறும் 7 ரன்கள் வித்தியாத்தில் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இப்படி, கடந்த ஓராண்டில் மட்டும் தென் ஆப்ரிக்கா ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சேர்த்து, 3 டி20 உலகக் கோப்பை ஃபைனல் விளையாடியும் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதனால், ஐசிசி உலகக் கோப்பை வெற்றியை நுகர வேண்டும் என்ற தென் ஆப்ரிக்கா ரசிகர்கள் கனவு கானல் நீராகவே தொடர்கிறது.

Continues below advertisement