ஆசிய கோப்பைக்கான மகளிர் கிரிக்கெட் டி20 போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. ஆசிய மகளிர் டி20 போட்டி வரும் அக்டோபர் 1-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து, இலங்கை. மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.
அக்டோபர் 1-ந் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித்தொடர் வங்கதேசத்தில் நடைபெற உள்ளது. வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் சர்வதச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் அக்டோபர் 7-ந் தேதி மோதுகிறது.
- அக்டோபர் 1-ந் தேதி முதல் போட்டியில் வங்காளதேசமும், தாய்லாந்து அணிகளும் மோதுகின்றன. அதே தினத்தில் இந்தியாவும், இலங்கையும் மற்றொரு போட்டியில் ஆடுகின்றன.
- அக்டோபர் 2-ந் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான்- மலேசியா அணிகள், இலங்கை – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 3-ந் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் – வங்காளதேசம், இந்தியா – மலேசியா அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 4-ந் தேதி நடைபெறும் போட்டியில் இலங்கை – தாய்லாந்து, இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 5-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகம் – மலேசியா அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 6-ந் தேதி பாகிஸ்தான் – தாய்லாந்து, வங்காளதேசம் – மலேசியா ஆகிய அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 7-ந் தேதி தாய்லாந்து – ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 8-ந் தேதி இலங்கை – மலேசியா, இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 9-ந் தேதி தாய்லாந்து – மலேசியா, பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 10-ந் தேதி இலங்கை – வங்காளதேசம், இந்தியா – தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 11-ந் தேதி வங்காளதேசம் – ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 13-ந் தேதி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணியும், புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள அணியும் அரையிறுதியில் மோதுகின்றன.
- அக்டோபர் 13-ந் தேதி இரண்டாவது அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள அணியும், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள அணியும் மோதுகின்றன.
- அக்டோபர் 15-ந் தேதி இறுதிப்போட்டி மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது.
மேலும் படிக்க : KL Rahul : டி20 போட்டிகளில் கே.எல்.ராகுல் புதிய சாதனை...! அப்படி என்ன செய்தார் தெரியுமா..?