பஞ்சாப்பில் உள்ள மொகாலியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 11 ரன்களுக்கும், விராட்கோலி 2 ரன்களுக்கும் ஆட்டமிழக்க தொடக்க வீரர் கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடினார்.


சூர்யகுமார் யாதவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தலான பேட்டிங் செய்த கே.எல்.ராகுல் அதிரடியாக அரைசதம் அடித்தார். 35 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த கே.எல்.ராகுல் சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.






அதுமட்டுமின்றி, டி20 போட்டிகளில் குறைந்த போட்டிகளில் 2000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையும் படைத்தார். முதல் இடத்தில் 52 போட்டிகளில் 2000 ரன்களை கடந்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சாதனை முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட்கோலி உள்ளார். அவர் 56 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.






தற்போது, மூன்றாவது இடத்தில் துணை கேப்டன் கே.எல்.ராகுல் 58 போட்டிகளில்  இந்த சாதனையை படைத்துள்ளார். கே.எல்.ராகுல் 62 போட்டிகளில் 2 ஆயிரத்து 18 ரன்களை எடுத்துள்ளார். அவற்றில் 2 சதங்களும், 18 அரைசதங்களும் அடங்கும். மேலும், 109 ஐ.பி.எல். போட்டிகளில் 3 ஆயிரத்து 889 ரன்களையும் குவித்துள்ளார். அவற்றில் 4 சதங்கள், 31 அரைசதங்கள் அடங்கும்.


43 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7 சதங்கள், 13 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 547 ரன்கள் எடுத்துள்ளார். 45 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 சதங்கள் 10 அரைசதங்களுடன் 1665 எடுத்துள்ளார்.


மேலும் படிக்க : ICC Playing Conditions: இனிமே இதுக்கு நிரந்தர தடை.. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள்.. கண்டிஷன்களை அடுக்கிய ஐசிசி!


மேலும் படிக்க : New Zealand T20 : டி20 உலகக் கோப்பை தொடர்.. வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணி அறிவிப்பு..!