WPL 2024: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன.


மகளிர் பிரீமியர் லீக் 2024:


நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் ஆடவருக்கான ஐபிஎல் தொடரைப் போன்று, பெண்களுக்கான (WPL) மகளிர் பிரீமியர் லீக் தொடரை கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்தது. 5 அணிகளுடன் நடைபெற்ற இந்த தொடரில், இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் இன்று தொடங்குகிறது.  முதல் போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிய, மும்பை மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


போட்டிகளை எங்கு, எப்படி காண்பது?


அடுத்த 24 நாட்கள் நடைபெற உள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவில், 20 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்த அணிகள், அரையிறுதிப் போட்டியில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். மும்பை - டெல்லி இடையேயான முதல் போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.  இப்போட்டிகளின் நேரலையை, Sports 18 Network தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


தொடக்க நிகழ்ச்சி:


தொடரை முன்னிட்டு இன்று கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'கிரிக்கெட் கா குயின்டம்' என்ற தலைப்பில், மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2024 தொடக்க விழா இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்குத் தொடங்கும். இதில், பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், டைகர் ஷெராஃப், ஷாஹித் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, வருண் தவான் மற்றும் கார்த்திக் ஆர்யன் ஆகியோரின் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பிப்ரவரி 23 முதல் மார்ச் 4 வரையிலான அனைத்து WPL போட்டிகளும் பெங்களூரில் உள்ள சின்னச் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளன. 


போட்டி அட்டவணை:



  • பிப்ரவரி 23, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • பிப்ரவரி 24, 7:30: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs UP வாரியர்ஸ், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • பிப்ரவரி 25, 7:30: குஜராத் ஜெயண்ட்ஸ் எதிராக மும்பை இந்தியன்ஸ், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • பிப்ரவரி 26, 7:30: UP வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • பிப்ரவரி 27, 7:30: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs குஜராத் ஜெயண்ட்ஸ், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • பிப்ரவரி 28, 7:30: மும்பை இந்தியன்ஸ் vs UP வாரியர்ஸ், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • பிப்ரவரி 29, 7:30: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேபிடல்ஸ், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • மார்ச் 1, 7:30: UP வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • மார்ச் 2, 7:30: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • மார்ச் 3, 7:30: குஜராத் ஜெயண்ட்ஸ் எதிராக டெல்லி கேபிடல்ஸ், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • மார்ச் 4, 7:30: UP வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • மார்ச் 5, 7:30: டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • மார்ச் 6, 7:30: குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • மார்ச் 7, 7:30: UP வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • மார்ச் 8, 7:30: டெல்லி கேபிடல்ஸ் vs UP வாரியர்ஸ், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • மார்ச் 9, 7:30: மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • மார்ச் 10, 7:30: டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • மார்ச் 11, 7:30: குஜராத் ஜெயண்ட்ஸ் vs UP வாரியர்ஸ், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூர்

  • மார்ச் 12, 7:30: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • மார்ச் 13, 7:30: டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ், எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

  • மார்ச் 15, மாலை 7:30: எலிமினேட்டர் (2வது இடம் vs 3வது இடம் பிடித்த அணிகள்), அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி

  • மார்ச் 17, மாலை 7:30: இறுதிப் போட்டி (1வது இடம் பிடித்த அணி vs எலிமினேட்டர் வெற்றி), அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி