இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஷஸ் டெஸ்ட் தோல்விக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதில் முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஷஸ் டெஸ்ட் தொடரை போல் மீண்டும் இந்த டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சொதப்பியது. இதைத் தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 17.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 


 


இந்நிலையில் இங்கிலாந்து அணியின் இந்த மோசமாக தோல்விக்கு பிறகு மீண்டும் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வானின் ட்வீட் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 21ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. அந்த அட்டவணையை மேற்கோள் காட்டி மைக்கேல் வான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், “இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இறுதிப் போட்டியில் விளையாட போவது யார்?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். 


 






அவர் பதவிட்ட அடுத்த நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதனால் ட்விட்டரில் ரசிகர்கள் அவரின் இந்தப் பதவியை மேற்கோள் காட்டி கலாய்த்து வருகின்றனர். நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணியை இங்கிலாந்து இறுதிப் போட்டியில் சந்திக்காது என்பது போல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


 






 






 






 






 






 


ஏற்கெனவே ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த போது இவரின் ட்வீட் ஒன்றை ரசிகர்கள் கலாய்த்தனர். அதன்பின்பு தற்போது மீண்டும் இவருடைய ட்விட்டர் பதிவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 



மேலும் படிக்க: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகளுக்கான மைதானங்கள் அறிவிப்பு