இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. பிப்ரவரி 6-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும், பிப்ரவரி 16-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் தொடங்க உள்ளது.
கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாகவும் மற்றும் மூன்றாவது அலை பயம் காரணமாக இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை பாதுகாப்பான முறையில் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 ஒரு நாள் போட்டிகளும் அகமதாபாத் மைதானத்திலும், 3 டி20 போட்டிகளும் கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டிகளுக்கான அட்டவணை
பிப்ரவரி 6 | முதல் ஒரு நாள் போட்டி | அகமதாபாத் |
பிப்ரவரி 9 | இரண்டாவது ஒரு நாள் போட்டி | அகமதாபாத் |
பிப்ரவரி 11 | மூன்றாவது ஒரு நாள் போட்டி | அகமதாபாத் |
பிப்ரவரி 16 | முதல் டி20 போட்டி | கொல்கத்தா |
பிப்ரவரி 18 | இரண்டாவது டி20 போட்டி | கொல்கத்தா |
பிப்ரவரி 20 | மூன்றாவது டி20 போட்டி | கொல்கத்தா |
முன்னதாக, ஆறு மைதானங்களில் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா காரணமாக பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டியுள்ளதால், இரண்டு மைதானங்களில் அனைத்து போட்டிகளையும் நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்