India T20 World Cup Squad: ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பவுலிங் யூனிட், ஆல்-ரவுண்டர்களை அதிகளவில் நம்பி இருப்பதாக தெரிகிறது.

Continues below advertisement

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:

நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் பங்கேற்கும், ஐசிசி டி20 உலகக் கோப்பையின் அடுத்த எடிஷன் வரும் பிப்ரவரி 7ம் தேதி தொடங்க உள்ளது. சுமார் ஒரு மாத காலம் இந்தியா மற்றும் இலங்கையில் லீக், சூப்பர் 8, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க உள்ள கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பேட்டிங், பவுலிங் என இரண்டும் சரியான கலவையில் அமைந்துள்ள நிலையில், ஆல்-ரவுண்டர்களை அதிகளவில் நம்பி இருப்பதை உணர முடிகிறது. குறிப்பாக பவுலிங் யூனிட்டில் ஆல்-ரவுண்டர்கள் அதிகளவில் பங்காற்ற வேண்டியுள்ளது.

Continues below advertisement

இந்திய அணியின் உத்தேச ப்ளேயிங் லெவன்:

  • சஞ்சு சாம்சன் (பேட்ஸ்மேன்/வி.கீ.,)
  • அபிஷேக் சர்மா (பேட்ஸ்மேன்)
  • திலக் வர்மா (பேட்ஸ்மேன்)
  • சூர்யகுமார் யாதவ் (பேட்ஸ்மேன்)
  • ஹர்திக் பாண்ட்யா (வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்)
  • ஷிவம் துபே (வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்)
  • ரிங்கு சிங் (பேட்ஸ்மேன்)
  • அக்சர் படேல் (சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்)
  • அர்ஷ்தீப் சிங் (வேகப்பந்து வீச்சாளர்)
  • ஜஸ்பிரித் பும்ரா (வேகப்பந்து வீச்சாளர்)
  • வருண் சக்கரவர்த்தி (சுழல் பந்து வீச்சாளர்)

மாற்று வீரர்கள்: இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ்

பவுலிங் யூனிட் எப்படி? - வேகப்பந்து வீச்சாளர்கள்

பேட்டிங் யூனிட்டில் ப்ளேயிங் லெவனிற்கான அதிரடி வீரர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கான மாற்று வீரர்களாகவும் இஷான் கிஷன் உடன் சேர்த்து, இரண்டு ஆல்-ரவுண்டர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், பவுலிங் யூனிட்டில் வேகப்பந்து வீச்சில்இரண்டு பேர் மட்டுமே முழு நேர பந்துவீச்சாளர்களாக திகழ்கின்றனர். குறிப்பாக, அனுபவம் வாய்ந்த பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் அணியில் இருப்பது பிரதான பலமாக பார்க்கப்படுகிறது. கடந்த உலகக் கோப்பையில் முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்த முகமது சிராஜ் அணியில் இல்லாமல் இருப்பது ஏமாற்றமாக உள்ளது. சுழற்பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி மட்டுமே முழு நேர பந்துவீச்சாளராக அணியில் இடம்பெறக்கூடும்.

ஆல்-ரவுண்டர்களின் தாக்கம்:

ப்ளேயிங் -லெவனில் இடம்பெறக்கூடிய 6 பந்துவீச்சாளர்களில் 3 பேர் ஆல்-ரவுண்டர்களாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே முதன்மையான தேர்வுகளாக இருப்பார்கள். இருவருமே தென்னாப்ரிக்கா தொடரில் பந்துவீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதுபோக சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக துணை கேப்டன் அக்சர் படேல் இடம்பெறுவார். கடந்த உலகக் கோப்பையில் ஜடேஜா வழங்கிய பங்களிப்பை அளிக்க வேண்டிய பொறுப்பு இப்போது அக்சர் வசம் வந்துள்ளது.

பந்துவீச்சை தாண்டி அணியின் பேட்டிங் ஆர்டரிலும் ஆல்-ரவுண்டர்கள் முதுகெலும்பாக திகழ்கின்றனர். இவர்களது ரன் குவிப்பு அணியின் வெற்றிக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.  அணியில் இடம்பெற்றுள்ள ஆல்-ரவுண்டர்கள் அனைவருமே, உள்ளூர் மைதானங்களில் விளையாடிய வலுவான அனுபவத்தை கொண்டுள்ளனர். எனவே, இவர்களின் உதவியுடன் நடப்பு சாம்பியனான இந்தியா மீண்டும் கோப்பையை வெல்லும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.