Shubman Gill: ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து கில் நீக்கப்பட்டதை அடுத்து, கேப்டன் சூர்யகுமாருக்கு அணி நிர்வாகம் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சைலண்டாக தூக்கப்பட்ட கில்:
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை, பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இதில் துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில் இடம்பெறாதது கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு கிடையாதாம். கடந்த 17ம் தேதி லக்னோவில் நடைபெறுவதாக இருந்து ரத்து செய்யப்பட்ட, தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் போதே முடிவு செய்யப்பட்டதாம். ஆனாலும் இதுகுறித்து, சனிக்கிழமை காலை வரை, இந்தியாவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனிடம் தேர்வுக்குழுத் தலைவரோ அல்லது கேப்டன் சூர்யகுமார் யாதவோ அல்லது தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரோ தெரிவிக்கவில்லை என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வருடமாக தனது சாதனை மிகவும் மோசமாக விளையாடி வந்த கில்லுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டாலும், இந்த நிகழ்வு ஒரு அவமானகரமானதாகவே கருதப்படுகிறது.
கில் திட்டமிட்டு நீக்கம்:
பிசிசிஐ நிர்வாகத்தின் முடிவை அறிந்து கம்பீர் மற்றும் சூர்யகுமார் தலைமையிலான அணி நிர்வாகம், கில்லின் விவகாரத்தில் தலையிடவில்லை என்று கூறப்படுகிறது. பிசிசிஐ வட்டார தகவல்களின்படி, காயம் தீவிரமாக இல்லாததால் கில் அகமதாபாத் போட்டியில் விளையாட விரும்பியபோதும், அவரை அணியிலிருந்து நீக்க அணி நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்திருந்ததாம். ஆரம்பத்தில், மருத்துவக் குழு முடி எலும்பு முறிவு ஏற்படுமோ என்று அஞ்சினர், ஆனால் பின்னர் ஸ்கேன் செய்ததில் அது வெறும் லேசான காயம் என்றும், அவர் அகமதாபாத் விளையாட்டை வலி நிவாரணிகளில் விளையாடியிருக்கலாம் என்றும் தெரியவந்தது. அதேநேரம், ஏற்கனவே மோசமான ஃபார்மை கொண்டுள்ள கில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஆட்டங்களில் மொத்தம் 32 ரன்கள் மட்டுமே எடுத்ததால், தற்போது உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளார். கடந்த உலகக் கோப்பைக்கான அணியிலும் அவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யகுமாருக்கு வார்னிங்?
கில் மட்டுமின்றி கேப்டன் சூர்யகுமார் யாதவும் கடந்த ஓராண்டாகவே பேட்டிங்கில் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். நடப்பாண்டில் 19 இன்னிங்ஸ்களில் விளையாடி 123.2 ஸ்ட்ரைக் ரேட்டில் வெறும் 218 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அறிமுகமான பிறகு, ஓராண்டில் அவரது மோசமான செயல்பாடு இதுவாகும். எனவே, தொடர்ந்து மோசமாக செயல்பட்டு, ரன்களை குவிக்க தவறினால் இன்று கில்லுக்கு நடந்தது,நாளை உங்களுக்கும் நடக்கலாம் என சூர்யகுமார் யாதவிற்கு பிசிசிஐ மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாம்.
உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன் (வி.கீ.), இஷான் கிஷன் (வி.கீ.), அபிஷேக் சர்மா, திலக் சிங் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, சக்ரவ்த் பும், சக்ரவ்த் பும், சக்ரவ்த் பும் ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்