டிஎன்பிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற 8 அணிகளுக்கு இடையேயான போட்டி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
டி.என்.பி.எல் தொடர்:
உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலான நடப்பாண்டு டி.என்.பி.எல். தொடர், கடந்த ஜுன் மாதம் 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 7 லீக் போட்டிகளில் விளையாடும். மொத்தம் 28 லீக் போட்டிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதில் 21 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் 7 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக, அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
டிஎன்பிஎல் புள்ளி பட்டியல்:
எண் |
---|
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
முந்தும் 3 அணிகள்:
இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளின் அடிப்படையில் கோவை, நெல்லை, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள கோவ அணி, இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது.
இதனால், பிளே-ஆஃப் சுற்றுக்கு கோவை அணி செல்வது உறுதியாகிவிட்டது. அதற்கடுத்த இடத்தில் உள்ள நெல்லை மற்றும் திண்டுக்கல் ஆகிய அணிகள், தலா 5 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றாலும், அந்த அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதியாகிவிடும்.
நான்காவது இடத்திற்கு கடும் மோதல்:
ஐபிஎல் தொடரை போன்று டி.என்.பி.எல் தொடரிலும் இந்த முறை 4வது இடத்திற்கு தான் கடும்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் மதுரை அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. தனக்கான இடத்தை உறுதி செய்ய மீதமுள்ள 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மதுரை அணி உள்ளது.
அதேநேரம் சேப்பாக் அணி 4 புள்ளிகளை மட்டுமே பெற்று இருந்தாலும், ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது. இதனால், மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும், டாப்-4க்குள் நுழைய லேசான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 2 வெற்றிகளை பெற்றுள்ள திருப்பூர் அணிக்கு இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மீதமுள்ளன. அந்த இரண்டிலும் வெற்றி பெற்றால், திருப்பூர் அணியும் பிளே-ஆஃப் சுற்றுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
கடைசி 2 இடங்கள்:
நடப்பு தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சேலம் அணி வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மற்றொரு அணியான திருச்சி அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.