நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் வார்விக்ஷயர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வார்விக்ஷயர் அணி வெற்றி பெற்றிருந்தாலும், ஷஹீன் அப்ரிடி தனது பந்துவீச்சில் அனைவரது மனதையும் வென்றார்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று, இங்கிலாந்தில் தற்போது வைட்டலிட்டி டி20 பிளாஸ்ட் நடைபெற்று வருகிறது. நேற்று நார்த் குரூப் பிரிவில் நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் வார்விக்ஷயர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற வார்விக்ஷயர் அணி கேப்டன் அலெக்ஸ் டேவிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த நாட்டிங்ஹாம்ஷயர் 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் டாம் மூர்ஸ் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் 73 ரன்கள் அடித்திருந்தார்.
வார்விக்ஷயர் அணி சார்பில் ஹசன் அலி மற்றும் லிண்டொட் தலா 3 விக்கெட்களும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர்.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வார்விக்ஷயர் அணிக்கு ஆரம்பமே அடிசறுக்கலாக இருந்தது. நாட்டிங்ஹாம்ஷயர் அணிக்காக விளையாடிய ஷாஹீன் அப்ரிடி ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்தார். முதல் ஓவரிலேயே ஷாஹீன் இந்த சாதனையை செய்தார்.
ஷாஹீன் வீசிய முதல் ஓவரின் வீடியோவை வைட்டலிட்டி பிளாஸ்ட் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் பகிரப்பட்டது. நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக முதல் ஓவரை வீசிய ஷாஹீன், முதல் பந்தை வைட் ஆக வீச, அது பவுண்டரிக்கு சென்றது. அவரது அடுத்த பந்தில், அவர் வார்விக்ஷயர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் டேவிஸிடம் யார்க்கர் லெந்த் பந்து வீசினார். அதை தடுக்க முயன்ற டேவிஸ் தரையில் விழுந்து எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.
அதன் அடுத்த பந்தில் கிறிஸ் பெஞ்சமின் பந்துவீச்சில் ஷாஹீன் ஆட்டமிழந்தார். அதே நேரத்தில், ஷாஹீனின் ஓவரின் மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் தலா ஒரு ரன்கள் வந்தது. ஐந்தாவது பந்தில், ஷாஹீன் இடது கை பேட்ஸ்மேன் டான் மவுஸ்லியை வெளியேற்ற, ஓவரின் கடைசி பந்தில், எட் பெர்னார்டின் ஆஃப் ஸ்டம்பைப் பிடுங்கி எறிந்து பெவிலியன் அனுப்பினார் அப்ரிடி.
போட்டியில் ஷாஹீனின் சிறப்பான பந்துவீச்சாக இது அமைந்தது. 7.20 என்ற எகானமியுடன் 4 ஓவர்களில் 29 ரன்களை விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், இந்த போட்டியில் ஒரு மெய்டன் ஓவரை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாஹீன் அப்ரிடி அணி தோல்வி:
ரன்களை விரட்டிய வார்விக்ஷயர் அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. அந்த அணியில் ராபர்ட் யேட்ஸ் 46 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 65 ரன்கள் குவித்தார்.