புஷ்பா படத்தின் 'ஸ்ரீவல்லி' பாடலில் ஹர்திக் பாண்டியா தனது பாட்டியுடன் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிச்சை விவாகரத்து செய்தார். இச்சூழலில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக கொழும்பிற்கு சென்றுள்ளார். தற்போது இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தனது பாட்டியுடன் புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவல்லி பாடலுக்கு நடனமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூகவலைத்தளங்களில் வைரலான வீடியோ பழையதாக இருந்தாலும், சமூகவலைத்தள பயனர்கள் அதை மிகவும் விரும்புகின்றனர். அதே நேரத்தில், இந்த பதிவின் தலைப்பில், ஹர்திக் பாண்டியா 'எங்கள் சொந்த புஷ்பா நானி' என்று குறிப்பிட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் தனது பலத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா:
சமீபத்தில் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றியது.
இந்திய அணியின் வெற்றிக்கு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்காற்றினார். பேட்டிங் தவிர, பந்துவீச்சிலும் தனது பலத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டியா தனது சிறப்பான பந்துவீச்சால் போட்டியின் தலைவிதியை மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.