உலகில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் கிரிக்கெட் போட்டியும் ஒன்று. கிட்டத்தட்ட 100 நாடுகள் ஐசிசியுடன் தங்களை இணைத்து கிரிக்கெட் விளையாடி வருகின்றன. ஐசிசி நடத்தும் தகுதிச் சுற்றில் கலந்து கொண்டு, சிறந்த விளையாட்டினை வெளிப்படுத்தி ஐசிசி நடத்தும் மூன்று வகை உலகக்கோப்பைகளிலும் விளையாட,  முயற்சிக்கின்றன. 


ஐசிசி நடத்தும் போட்டிகள் மட்டும் இல்லாமல், ஆசிய கோப்பை, மூன்று நாடுகள் மட்டும் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள், ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடக்கும் ஆஷஸ் டெஸ்ட் போன்ற மிகமுக்கியமான போட்டிகளும் உள்ளன. இவை இல்லாமல் இரு நாடுகளுக்கு இடையிலான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. ஆனால் இவை அணைத்தும் ஐசிசியின் கட்டுப்பாட்டில் தான் நடைபெறுகிறது. 


சீனா ஏன் கிரிக்கெட் மீது ஆர்வம் காட்டுவதில்லை


இவ்வளவு பிரபலமான கிரிக்கெட் போட்டியை சீனா போன்ற விளையாட்டிற்கு முக்கியத்துவம் தரும் நாடு விளையாடாமல் இருப்பது குறித்து என்றாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கான பதிலை இந்த கட்டுரையில் காணலாம். 


ஒலிம்பிக் போட்டி என்றால் பதக்கங்களை குவிக்கும் சீனா பதக்கப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஏதாவது ஒன்றில் இருக்கும். கால்பந்து, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் போன்ற பிற விளையாட்டுகளில் சீனா நிறைய முதலீடு செய்வதாகும். இதன் விளைவாக கூடைப்பந்து மற்றும் கால்பந்தைத் தவிர சீன வீரர்கள் பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் சிறந்தவர்களாக விளங்குகின்றனர். விளையாட்டிற்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கும் சீனா கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் இருக்க காரணமாக பார்க்கப்படுவது, ஆங்கிலேயர்களின் ஆட்சி தான். 




ஆங்கிலேயர்கள் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளை ஆட்சி செய்தனர். அப்போது ஆங்கிலேயர்கள்  தங்களின் பொழுது போக்கு விளையாட்டான, கிரிக்கெட் போட்டிகளை நடத்தினர். ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னரும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த நாடுகள் கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஆங்கிலேயர்கள் சீனாவை ஒருபோதும் ஆட்சி செய்யவில்லை. இதனால், சீன மக்கள் கிரிக்கெட் போட்டியின் மீது ஆர்வமில்லாமல் இருக்கின்றனர். 


கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆரம்பத்தில் 22 நாடுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாடின. இருப்பினும், இப்போது சுமார் 100 நாடுகள் ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) உடன் இணைக்கப்பட்டுள்ளன. 




மேலும், சீனாவில் இளம் தலைமுறையினரிடமும் கிரிக்கெட் போட்டியை கொண்டு சேர்க்க, சீனியர் வீரர்கள் இல்லாததும் முக்கியம் காரணமாக உள்ளது. சீனா மகளிர் அணி சமீபத்தில் பெண்கள் உலக T-20 தகுதிச் சுற்றில் பங்கேற்றது, மேலும் அவர்கள் மிகவும் சுமாராகவே விளையாடினர். இப்போது சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய், ஷென்யாங், டேலியன், குவாங்சோ, ஷென்சென், சோங்கிங், தியான்ஜின் மற்றும் ஜினான் ஆகிய ஒன்பது நகரங்களில் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. இதில் 150க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஈடுபட்டுள்ளன. சீனாவைப் போல் ஜெர்மனி, இத்தாலி மற்றும்  அர்ஜென்டினா போன்ற அணிகள் கிரிக்கெட் விளையாடுகின்றன ஆனால் அவை கவனிக்கப்படுவதில்லை. 


சீனா போன்ற விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் பங்கேற்றால், கிரிக்கெட் களம் இன்னும் சூடு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.