தமிழ்நாடு  பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்)  2023 இன் 10வது போட்டியில் திண்டுக்கல்லில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன் அணியை, நெல்லை ராயல் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன் அணி வெற்றிபெற்று டிஎன்பிஎல் தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

இந்த வெற்றியின் மூலம் ஐட்ரீம் திருப்பூர் தமிழன் அணி இரண்டு புள்ளிகளை பெற்று 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நேற்றைய போட்டியில் நெல்லை அணி தோல்வியை சந்தித்தாலும் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. நெல்லை கிங்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 1 தோல்வியை பெற்றுள்ளது. 

யார்தான் முதலிடம்..? 

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இவர்களின் நிகர ரன் டேட்டுடன் 2.408 ஆக உள்ளது. இவர்களை அடுத்து லைக்கா சூப்பர் கிங்ஸ் 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 1.687 நிகர ரன் ரேட்டுடன் இரண்டாவது இடத்திலும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 1.026 நிகர ரன் ரேட்டுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. 

சேலம் ஸ்பார்டன்ஸ் 5 வது இடத்திலும், பால்சி திருச்சி 7வது இடத்திலும், மதுரை பாந்தர்ஸ் கடைசி இடத்திலும் இருக்கின்றன.

# அணொ போட்டிகள் வெற்றி தோல்வி முடிவு நிகர ரன் ரேட் புள்ளிகள்
1 திண்டுக்கல் டிராகன்ஸ் 2 2 0 0 +2.408 4
2 லைகா கோவை கிங்ஸ் 3 2 1 0 +1.687 4
3 சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 2 1 0 +1.026 4
4 நெல்லை ராயல் கிங்ஸ் 3 2 1 0 +0.648 4
5 சேலம் ஸ்பார்டன்ஸ் 2 1 1 0 -0.183 2
6 IDream திருப்பூர் தமிழர்கள் 3 1 2 0 -1.497 2
7 பா11சி திருச்சி 2 0 2 0 -2.310 0
8 Siechem மதுரை பாந்தர்ஸ் 2 0 2 0 -2.865 0

போட்டி சுருக்கம்: 

டிஎன்பிஎல் 10 வது போட்டியில் திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த நெல்லை கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாற தொடங்கியது. முதல் 5 வரிசை பேட்ஸ்மேன்கள் மொத்தமாகவே, 39 ரன்களை மட்டுமே எடுத்தனர். 

அடுத்து வந்த சோனு யாதவ் 35 ரன்களும், ரித்திக் ஈஸ்வரன் 15 ரன்களும், குருசாமி 20 ரன்கள் எடுக்க, நெல்லையின் ஸ்கோர் டிசெண்ட் ஸ்கோரை எட்டியது. 18.2 ஓவர்களில் நெல்லை அணி 124 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 

127 ரன்கள் இலக்கை துரத்திய திருப்பூர் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து வெற்றது. அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 49 ரன்கள் எடுத்திருந்தார்.