உலகெங்கும் கால் பந்தாட்டத்திற்கு அதிக ரசிகர்கள் இருக்கும்போது இந்தியாவில்தான் கிரிக்கெட் விளையாட்டிற்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ உலகின் பணக்கார கிரிக்கெட் நிர்வாக அமைப்பாக கருதப்படுகிறது.  இந்த அமைப்பு கணிசமான அளவு வருமானத்தை ஈட்டுகிறது. இதனால் அவர்கள் இந்திய அரசிடம் இதுவரை எந்த நிதியுதவியையும் நாடவில்லை.


கிரிக்கெட்டை மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்களையும் இந்தியர்களும் விளையாட்டு ஆர்வலர்களும் கொண்டாடி தீர்ப்பார்கள். அவர்களை மட்டுமல்லாது அவர்களின் குடும்பங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு எனலாம்.


இங்கு சில கிரிக்கெட்டர்களின் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் அவர்கள் தற்போது தங்கள் வாழ்வில் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றியும் பார்க்கலாம். 


சனா கங்குலி



இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி. அவருக்கு தற்போது 20 வயதாகிறது. இவர் தற்போது லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி இளங்கலை படிப்பைப் படித்து வருகிறார்.


ஆருணி கும்ப்ளே



ஆருணி கும்ப்ளே, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளேயின் மூத்த மகள். 
ஆருணி தனது பள்ளிப் படிப்பை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சோபியா உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அவர் தற்போது பட்டயக் கணக்காளராக (Chartered Accountant) பணிபுரிவதாகக் கூறப்படுகிறது.


ஸ்வஸ்டி கும்ப்ளே



ஸ்வஸ்டி கும்ப்ளே அனில் கும்ப்ளேயின் இளைய மகள். அவருக்கு 15 வயதாகிறது. அவர் பெங்களூரில் உள்ள தி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பெஹ்லே அக்ஷர் எனும் அறக்கட்டளை ஒன்றில் கதைசொல்லியாகவும் பணியாற்றுகிறார்.


மாயாஸ் கும்ப்ளே



மாயாஸ் கும்ப்ளே அனில் கும்ப்ளேயின் மகன். அவருக்கு 17 வயதாகிறது. பெங்களூரிவில் படித்து வருகிறார். அவரின் இன்ஸ்டா பயோ  ‘வனவிலங்கு பிரியர், கதைசொல்லி’ என குறிப்பிடப்பட்டுள்ளது.


சமித் டிராவிட்



இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிடின் மகன் சமித் டிராவிட். அவரும் ஒரு கிரிக்கெட் வீரர். தற்போது 16 வயதாகும் இவர், 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் ஏற்கெனவே விளையாடியுள்ளார்.


அமியா தேவ்



இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் வீரர் கபில் தேவின் மகள் அமியா தேவ்.  இவர் இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். தனது தந்தையின் பயோபிக்கான 83 படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதன் மூலமாக பாலிவிட்டில் நுழைந்துள்ளார்.


அர்ஜூன் டெண்டுல்கர்



தந்தையை போலவே கிரிக்கெட் ஆர்வம் கொண்டவர் அர்ஜுன் டெண்டுல்கர். இவர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் இடதுகை பேட்ஸ்மேன். இவரை சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடதக்கது. 


சாரா டெண்டுல்கர்



அர்ஜுன் டெண்டுல்கரை போலவே சாரா டெண்டுல்கரும் பலருக்கும் அறிமுகமான நபர். திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் பள்ளியில் படித்து விட்டு கல்லூரிக்கு லண்டன் சென்றார்.  இவர் மாடலிங் துறையை தேர்வு செய்துள்ளார். தற்போது பிரபல ஆடை நிறுவனத்தின் மாடலாக ஒப்பந்தமாகியுள்ளார் சாரா டெண்டுல்கர்.