T20WC India Squad 2024: கடந்த 2022ம் ஆண்டு டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து, 8 பேரை நீக்கம் செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


உலகக் கோப்பைக்கான இந்திய டி-20 அணி:


உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் வரும் ஜுன் மாதம் 2ம் தேதி தொடங்கி, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. இதில் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடருக்கான தற்காலிக அணியை அறிவிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. இதனால், இந்திய அணியில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 10 வீரர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இன்னும் சில இடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளன. அதுவும் போட்டிகள் வெளிநாடுகளில் நடைபெறுவதால், காயங்கள் ஏற்படும் வாய்ப்பை கருத்தில் கொண்டு சுமார் 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மீண்டும் தேர்வாகும் வீரர்கள்:


இதுவரையிலான தகவல்களின்படி, கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக்கான இந்திய டி-20 அணியிலிருந்து, சுமார் 7 பேர் நடப்பாண்டு உலகக் கோப்பை தொடருக்கான அணியிலும் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது. அதேநேரம், மற்ற 8 பேர் காயம் உள்ளிட்ட காரணங்களால் ஓரம்கட்டப்படுவார்கள் என தெரிகிறது.   


2022 டி-20 உலகக் கோப்பை இந்திய அணி: ரோகித் சர்மா, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார் , முகமது ஷமி, ஹர்ஷல் படேல்


மேற்குறிப்பிட்ட நபர்களில் ரோகித் சர்மா இந்த ஆண்டும் கேப்டனாக தொடர உள்ளார். அதுபோக, விராட் கோலி, ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கான இடங்கள் காயங்கள் ஏதும் இல்லாவிட்டால் ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. 


8 பேருக்கு கல்தா கொடுக்கும் பிசிசிஐ:


7 பேரின் இடம் உறுதியான நிலையில் தீபக் ஹுடா, புவனேஷ்வர் குமார், மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் கூட இல்லை என கூறப்படுகிறது. குல்தீப் யாதவின் எழுச்சி அஷ்வினுக்கன வாய்ப்பை மந்தமக்கியுள்ளது. ஜடேஜா மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பி இருப்பதால்,  மற்றொரு ஆல்-ரவுண்டரான அக்சர் படேலுக்கான வாய்ப்பும் குறைந்துள்ளது. ஹர்ஷல் படேலுக்கு பதிலாக சிராஜும், காயமடைந்துள்ள ஷமியின் இடத்திற்கு பும்ராவும் தேர்வு செய்யப்பட உள்ளனர். குல்தீப் மற்றும் ஜடேஜா இருப்பதால், கூடுதல் சுழற்பந்து விச்சாளராக சாஹல் அணியில் இடம்பெறுவதும் சந்தேகமே. ஆனாலும் அதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.  தினேஷ் கார்த்திக்கின் இடத்திற்காக ஷிவம் துபே, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக்  என பல இளம் அதிரடி பேட்ஸ்மேன்கள் வரிசையில் உள்ளனர். 


2024 டி-20 உலகக் கோப்பைக்கான உத்தேச இந்திய அணி:


ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், ஆவேஷ் கான், சஞ்சு சாம்சன் , சுப்மன் கில்