வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கீரன் பொல்லார்ட் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பெயர் ஒலிக்கும் சில வீரர்களில் ஒருவர். இவரது அதிரடி பேட்டிங்கால் பல முன்னணி அணிகள் கதிகலங்கியுள்ளது. உலக கிரிக்கெட்டை பல பரபரப்பை ஏற்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு 2024 டி20 உலகக் கோப்பை போட்டியானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் அறிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் பொல்லார்ட் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
வெளியான தகவலின்படி, 2024 டி20 உலகக் கோப்பை வரை இங்கிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளராக பொல்லார்ட் அணியுடன் இணைந்திருப்பார். வெஸ்ட் இண்டீஸில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளதாலும், உள்ளூர் நிலைமைகள் குறித்து அவருக்கு தெரியும் என்பதாலும் தனது நிபுண கருத்துகளை தருவார்.
கடந்த 2022 ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து அணி. அந்த வகையில், நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து உள்ளது. இவ்வாறான நிலையில், பொல்லார்ட்டின் வருகையால் இங்கிலாந்து அணிக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கேப்டனாகவும் அசத்தல்:
36 வயதாக பொல்லார்ட் 2012ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்துள்ளார். இதுவரை உலகளவில் 600க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் பொல்லார்ட்க்கு உள்ளது. மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 63 சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள பொல்லார்ட், 1569 ரன்களையும் குவித்துள்ளார். மேலும், 101 போட்டிகளில் பந்துவீசி மொத்தம் 42 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 101 டி20 போட்டிகளில் 83 இன்னிங்ஸ்களில் 1569 ரன்கள் குவித்துள்ளார் போலார்ட். ஐபிஎல் போன்ற போட்டிகளில் 637 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 12,390 ரன்கள் எடுத்துள்ளார்.
மும்பை அணிக்காக பொல்லார்ட்டின் பங்கு:
உலகின் மிகவும் பிரபலமாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றிருந்தபோது, 5 முறையும் அணியில் இடம் பெற்றிருந்தார். டி20 கிரிக்கெட்டில் 637 போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இவருக்கு உள்ளது.
கடந்த ஆண்டு பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் பயிற்சியாளராக இருந்துள்ளார். இருப்பினும், பொல்லார்ட் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறினாலும், சமீபத்தில் நடந்து முடிந்த கரீபியன் பிரிமீயர் லீக்கில் தனது தலைமையில் கீழ் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். இந்தியன் பிரீமியர் லீக்கில் மிகவும் வெற்றிகரமான உரிமையாளரான மும்பை இந்தியன்ஸில் பேட்டிங் பயிற்சியாளராகவும், இங்கிலாந்து அணியில் ஆலோசகர் பயிற்சியாளராகவும் கீரன் பொல்லார்டின் நியமனம் அவரது ஆளுமையை வலுப்படுத்துகிறது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என தொடரை கைப்பற்றியுள்ளது.