மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் நிர்வாகமும், கரீபியன் ப்ரீமியர் லீக் தி சிக்ஸ்ட்டி என்ற பெயரில் 10 ஓவர் தொடரை அறிவித்துள்ளது.


10 ஓவர் கிரிக்கெட்:


உலகம் முழுவதும் பெரும்பாலோனாரால் விரும்பிப் பார்க்கும், விளையாடும் விளையாட்டாக கிரிக்கெட் இருந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆரம்பித்து, 50 ஓவர், 20 ஓவர் என்று கடந்து தற்போது 10 ஓவர் போட்டிகள் என்ற புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது. 10 ஓவர்கள் கொண்ட போட்டிகளை அறிமுகப் படுத்தியிருக்கிறது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் மற்றும் கரீபியன் ப்ரீமியர் லீக். சிக்ஸ்டி என்று பெயரிடப்பட்டுள்ள இத்தொடர் ஆகஸ்ட் 24 முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளின் விவரங்களை மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் க்ரிஸ் கெயில் அறிமுகப்படுத்தினார். 


இரண்டு தரப்பிலும் தலா 10 ஓவர்கள் விளையாடப்படும். ஆனால், ஒரு அணிக்கு 10 விக்கெட்டுகளுக்கு பதில் 6 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கும் . இத்தொடரில், 6 ஆண்கள் அணிகளும், 3 பெண்கள் அணிகளும் களமிறங்குகின்றன. 


ஒவ்வொரு அணியும் தலா 6 விக்கெட்டுகளைக் கொண்டிருக்கும் போட்டியின் போது விழும் ஆறாவது விக்கெட் கடைசி விக்கெட்டாக இருக்கும்.






விதிமுறைகள்:


இரண்டு அணிகளும் இரண்டு பவர் ப்ளேகளைக் கொண்டிருக்கும். முதல் இரண்டு ஓவர்களில் இரண்டு சிக்ஸர்களை அடித்தால் மூன்றாவது பவர் ப்ளே கிடைக்கும். இந்த மூன்றாவது பவர்ப்ளே 3வது மற்றும் 9வது ஓவர்களுக்கிடையில் எடுத்துக்கொள்ளலாம்.


10 ஓவர்கள் 5 ஓவர்களாகப் பிரித்து வீசப்படும். ஆனால், ஒரு வீரரால் இரண்டு ஓவர்கள் மட்டுமே பந்துவீச முடியும். 


குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசாவிட்டால், அந்த அணியின் ஒரு வீரர் கடைசி ஓவரில் ஃபீல்டிங் செய்வதில் இருந்து நீக்கப்படுவார். 


பந்துவீச்சாளரால் பேட்ஸ்மேனை அவுட்டாக்க முடியாத போது “மிஸ்ட்ரி ஃப்ரீ ஹிட்”டை எப்போது கொடுக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள்.


சிக்ஸ்டியின் ஆரம்ப தொடரின் போது கரீபியன் அணிகளின் சிறந்த வீரர்கள் களமிறங்குவார்கள். 


2022ம் ஆண்டின் சிபிஎல் ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 30ம் தேதிகளுக்கிடையில் நடைபெறும். ஆண் மற்றும் பெண்களுக்கான தொடர் இணைந்தே நடைபெறும்.


இந்த புரட்சிகரமான தொடர் புதிய கண்டுபிடிப்புகளை சந்திக்கும் என்றும், டி20 கிரிக்கெட் போட்டியை மாற்றுவதோடு இந்த போட்டிகளை இன்னும் வேகப்படுத்தும் என்று கூறியிருக்கிறார் கெயில்.