முதல் டி20 உலககோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி 2007 உலகக் கோப்பை கிரிக்கெட் 2007ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெப் சீரிஸாக உருவாகிறது. இதற்கான தலைப்பு இன்னும் சூட்டப்படவில்லை. இது 2023ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. மூன்றில் 2 பங்கு ஷூட்டிங் முடிவுடைந்தது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் 2007 ஆம் ஆண்டு முதல்முறையாக அறிமுகமானது. அந்தத் தொடரில் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
முதல் டி20 உலககோப்பை :
2007ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஃபைனல் போட்டி நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. அந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கவுதம் கம்பீர் 75 ரன்கள் விளாசினார். அடுத்தபடியாக ரோகித் சர்மா 30 ரன்கள் எடுத்தார்.
158 ரன்கள் இலக்கு
இதையடுத்து பாகிஸ்தான் அணி களத்தில் இறங்கியது. இம்ரான் நஸீர் 33 ரன்களும், முஸ்பா உல் ஹக் 43 ரன்களும் விளாசினர்.
எனினும், இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி நிலை குலைந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஆர்.பி.சிங் 3 விக்கெட்டுகளையும், இர்ஃபான் பதான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஜோகிந்தர் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த அற்புதமான ஆட்டம் வெப் சீரிஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.