India vs New Zealand: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கால்பந்து ஆடிய இந்தியா - நியூசி :
போட்டி நடக்கும் வில்லிங்டனில் தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தால், இரு அணி வீரர்களும் கால்பந்து விளையாடி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இந்தியாவின் சுழற்பந்து வீரர் சஹல் இந்திய அணியின் கோல் கீப்பராக உள்ளார். அவர் தன்னை நோக்கி வந்த பந்தை மிகவும் லாவகமாக தடுக்கிறார். இந்திய அணியின் சார்பாக பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனும் கால் பந்து விளையாடுகிறார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டித் திருவிழா இன்னும் இரு தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கால் பந்து விளையாடி வருவதை பலரும், கிரிக்கெட் வீரர்களையும் கால்பந்து மோகம் விட்டு வைக்க வில்லை. அது தான் கால் பந்து விளையாட்டின் தன்மையும் தாக்கமும் என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் எந்த கோலும் அடிக்கவில்லை.
ரத்தான போட்டி :
இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி வில்லிங்டன்ல் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்க இருந்தநிலையில் மழையால் ரத்து செய்யப்பட்டதாக ANI செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
வில்லிங்டன்ல் பெய்த கனமழையால் இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று காலை 11:30 மணியளவில் டாஸ் போட வேண்டிய நேரத்தில் வில்லிங்டனில் ஸ்கை ஸ்டேடியத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அதிக கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழையால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இரு அணிகளும் அரையிறுதியில் வெளியேறிய பிறகு, அணிகள் தங்கள் முதல் போட்டியில் விளையாட இருந்தனர். முன்னதாக, நியூசிலாந்து அணி பாகிஸ்தானிடம், இந்திய அணி இங்கிலாந்து அணியுடனும் தோல்வியுற்று டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்தநிலையில், இரு அணிகளுக்கிடையேயான 2வது டி20 போட்டி மவுண்ட் மவுங்கான் மைதானத்தில் விளையாட இருக்கின்றன. இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் வானிலை நன்றாக இருப்பதால் போட்டியில் எந்த பாதிப்பும் இருக்காது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 அணிகள் விவரம்:
இந்திய அணி: சுப்மான் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் ஐய் , குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல்
நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டெவோன் கான்வே(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி
நாள் | போட்டி விவரம் | நடைபெறும் இடம் | நேரம் |
டி20 போட்டி | |||
Nov 18, 2022 | IND vs NZ, 1st T20I | ஸ்கை ஸ்டேடியம், வில்லிங்டன் | மதியம் 12:00 |
Nov 20, 2022 | IND vs NZ, 2nd T20I | பே ஓவல், மவுன்கானுய் மலை | மதியம் 12:00 |
Nov 22, 2022 | IND vs NZ, 3rd T20I | மெக்லீன் பார்க், நேப்பியர் | மதியம் 12:00 |
ஒருநாள் போட்டி | |||
Nov 25, 2022 | IND vs NZ, 1st ODI | ஈடன் பார்க், ஆக்லாந்து | மாலை 7:00 |
Nov 27, 2022 | IND vs NZ, 2nd ODI | செடான் பார்க், ஹாமில்டன் | மாலை 7:00 |
Nov 30, 2022 | IND vs NZ, 3rd ODI | ஹாக்லி ஓவல், கிறிஸ்ட்சர்ச் | மாலை 7:00 |