சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
“ வடக்கு கடலோர தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
கடலோர மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்கால் போன்ற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான கனமழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்தில் வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
சென்னையில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கே சில இடங்களில் லேசான மழையும் பெய்தது.
தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று 40 முதல் 50 கி.மீ.க்கு வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. அக்டோபர் 26-ந் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : T20 WC, Ind vs Pak: 2019ல் இருந்து வெற்றிநடை போடும் இந்தியா..! பாகிஸ்தானையும் சம்பவம் செய்யுமா...?
கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி தென்கிழக்கு பருவமழை தொடங்கியது. தென்கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் நடப்பாண்டில் தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக நல்ல மழை பெய்து வருவதால் மாநிலம் முழுவதும் ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெல்டா மாவட்ட பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணை மூன்று மாதங்களுக்கு பிறகு 100 அடியை எட்டியது.
கன்னியாகுமரி பகுதியில் கடந்த வாரம் முழுவதும் பெய்த கனமழையால் முக்கிய அணைகள் நிரம்பியது மட்டுமின்றி, பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின், தென் மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள் சில...!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்