இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. மிகவும் பரபரப்பான ஆட்டத்தில்,   தென்னாப்பிரிக்கா அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், 3 ஒரு நாள் போட்டிகளையும் இழந்து தொடரையும் இழந்திருக்கிறது இந்திய அணி.


கேப்டவுனில் மூன்றாவது ஒரு நாள் போட்டி தொடங்குவதற்கு முன்பு, வழக்கம்போல அந்தந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. வீரர்கள் அனைவரும் வரிசையில் நிற்க, இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது கோலி சுயிங்கம் மென்று கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. தேசிய கீதத்தை கோலி அவமதிப்பதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், 288 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்காக விராட்கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 84 பந்தில் 5 பவுண்டரியுடன் 65 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.


மேலும் படிக்க: Vamika pics: பேட்டை வைத்து தாலாட்டு... பழைய புகைப்படங்களை வைரலாக்கிய கோலி ரசிகர்கள்


அவர் அரைசதம் அடித்தவுடனே, பெவிலியன் உள்ளே இருந்து விராட்கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தனது குழந்தையான வாமிகாவுடன் வெளியே வந்தார்.  இதுநாள் வரை கேமராவின் கண்களிலே படாமல் வந்த வாமிகாவை மைதானத்தில் இருந்த கேமரா மூலமாக இந்த உலகத்திற்கு முதன்முறையாக அறிமுகமானார். தனது மகளை பார்த்த மகிழ்ச்சியில் அரைசதம் அடித்த விராட்கோலி, தனது பேட்டையே குழந்தையை தாலாட்டுவது போல தாலாட்டி தனது குழந்தையை பார்த்து ரசித்தார். இந்த வீடியோயும் தற்போது வைரலாகி வருகிறது.


வீடியோவை காண:






எனினும், தேசிய கீதம் இசைக்கும்போது கோலி சுயிங்கம் மென்று கொண்டிருப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, 2017-ம் ஆண்டு இந்தியா - இலங்கை அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின்போது கோலி இதே போல சுயிங்கம் மென்று கொண்டிருந்தது சர்ச்சையானது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண