Watch Video: உருவாகிறார் குட்டி 'சின்ன தல'… ரெய்னாவின் பந்துகளை விளாசும் குட்டி ரெய்னா!

ரெய்னாவின் மகன் அவர் வலது கையில் தான் பேட்டிங் செய்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் குதூகலம் ஆகி குட்டி ரெய்னா தயாராகி வருகிறார், என்று மகிழ்ச்சியான கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

Continues below advertisement

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது மகனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட, அது வைரலாக பரவி வருகிறது.

Continues below advertisement

சின்ன தல ரெய்னா

ரசிகர்களால் சின்ன தல என்று அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் பழைய பார்மில் இல்லை என்ற காரணத்தால், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியிலிருந்தும் ரெய்னா நீக்கப்பட்டார். அவரது ரசிகர்கள் தற்போது அவரை மிஸ் செய்து வரும் நிலையில் அவ்வபோது அவர் இடும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. அப்படி அவர் தன் மகனுடன் கிரிக்கெட் விளையாடும் விடியோ தற்போது வைரலாகி உள்ளது.

இவரும் இடது கை பேட்ஸ்மேனா?

ரெய்னா போல அவரது மகன் இடது கை பேட்ஸ்மேன் இல்லை, அவர் வலது கையில் தான் பேட்டிங் செய்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் குதூகலம் ஆகி குட்டி ரெய்னா தயாராகி வருகிறார், என்று மகிழ்ச்சியான கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்: ‘தளபதி 67’ -ல் விஜயின் ஹியூமருக்கு கேரண்டி.. லோகேஷூடன் இணைந்த முக்கிய பிரபலம்.. வைரலாகும் போட்டோ!

28 லட்சம் பார்வைகள்

இந்த வீடியோ பகிரப்பட்டு ஒரே நாளில் 28 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த பதிவை 4 லட்சம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். மேலும் 1,700 பேருக்கு மேல் கமெண்டுகளில் தங்கள் மகிழ்வை பகிர்ந்துள்ளனர். 

'மனம் நிறைந்தது'

தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புதிய விடியோவில் அவரும் அவரது மகனும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். ரெய்னா பந்து வீச பிளாஸ்டிக் பேட் வைத்து அவரது குட்டி மகன் பேட்டிங் செய்கிறார். அவர் போடும் பந்துகளை அழகாக குறி வைத்து அடிப்பதை கண்டு நெகிழ்ந்த ரெய்னா, "தந்தையை போல மகன், எனது குட்டி மகன் அழகான ஸ்ட்ரோக்களை செய்ய முயல்கிறார், என் மனம் நிறைந்துள்ளது" என்று பதிவின் கீழ் எழுதி உள்ளார். ரெய்னா தற்போது பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு போட்டியில் விளையாட முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. உபி அணியில் திரும்பி மீண்டும் ரெய்னா ரன் குவித்தால், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் மினி ஏலத்தில் ரெய்னாவை மீண்டும் போட்டி போட்டு அணிகள் வாங்க முயற்சி செய்யும்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Continues below advertisement
Sponsored Links by Taboola