இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் ஷிகர் தவான் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தும் ஷிகர், இந்த வாரம் சாஹலோடு ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


தவானும், சாஹலும் ஜிம்மில் பிஸியாக வொர்க்அவுட் செய்து கொண்டு ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்ளும் வீடியோதான் அது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து வெளியிட்டிருக்கிறார் அவர். சமீபத்தில் ஸ்ரேயாஸ் ஐயருடன் இருந்த வீடியோவை வெளியிட்ட அவர், இந்த வீடியோவில் சாஹலுடன் லூட்டி அடித்திருக்கிறார்.






தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியதால், அகில இந்திய மூத்த தேர்வுக் குழு, ஒருநாள் தொடருக்கான கேப்டனாக கே.எல்.ராகுலை நியமித்துள்ளது. துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஷிகார் தவான், சாஹல் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


அணியின் விவரம்:


கே.எல். ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்),  சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண