இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வருபவர் புஜாரா. இவரது நிதானமான மற்றும் பொறுப்பான ஆட்டம் காரணமாக இவரை ராகுல் டிராவிட்டிற்கு அடுத்தபடியாக இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைப்பார்கள். இதன் காரணமாகவே, புஜாராவிற்கு இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் கிடைத்து வருகிறது. அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வாய்ப்பு என்பதே எட்டாக்கனியாக மாறிவிட்டது.




இந்த நிலையில், தற்போது இங்கிலாந்தின் கிளப் அணிகளுக்காக ஆடி வரும் புஜாரா ஒருநாள் போட்டி ஒன்றில் பீஸ்ட் மோடுக்கு மாறி ஒரே ஓவரில் 22 ரன்களை விளாசியது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






லண்டனில் நடைபெற்ற போட்டியில் சஸ்செக்ஸ் அணிக்கும், வார்க்விக்‌ஷையர் அணிக்கும் இடையே 50 ஓவர் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்  செய்த வார்விக்‌ஷையர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்களை விளாசியது. இதையடுத்து, 311 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சஸ்செக்ஸ் அணிக்கு தொடக்க வீரர் ஹாரிசன் 22 ரன்களிலும், டாம் கிளார்க் 30 ரன்களிலும் ஆட்டமிழக்க தொடக்க வீரர் ஹாரிசனுடன் இந்திய வீரர் புஜாரா ஜோடி சேர்ந்தார்.


அலஸ்டர் ஓர் நிதானமாக ஆட, புஜாரா மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை பவுண்டரிக்கு விளாசிய புஜாரா ஆட்டத்தின் 47வது ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடினார். அதாவது, ஆட்டத்தின் 47வது ஓவரை இங்கிலாந்த பந்துவீச்சாளர் லியாம் நார்வெல் வீசினார்.




அந்த ஓவரில் மட்டும் புஜாரா முதல் பந்தில் பவுண்டரியையும், இரண்டாவது பந்தில் 2 ரன்களையும், மூன்றாவது பந்தில் பவுண்டரியையும், நான்காவது பந்தில் 2 ரன்களையும், 5வது பந்தில் சிக்ஸரையும், கடைசி பந்தில் பவுண்டரியையும் விளாசி அந்த ஓவரில் மட்டும் 22 ரன்களை எடுத்து அசத்தினார். இதனால், புஜாரா 79 பந்துகளிலே 7 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் என மொத்தம் 107 ரன்களை விளாசி அசத்தினார்.


ஆனால், புஜாரா 49வது ஓவரில் ஆட்டமிழந்ததால் சஸ்செக்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இருப்பினும், புஜாராவின் பேட்டிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  


மேலும் படிக்க : Dwayne Bravo Record : ப்ராவோனா சும்மாவா...! டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை..! 600 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண