கிரிக்கெட் உலகின் மிகவும் புகழ்பெற்ற ஆல்ரவுண்டர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ப்ராவோ. வெஸ்ட் இண்டீஸ் அணி மட்டுமின்றி ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட பல அணிகளுக்காக ஆடி வருகிறார். இந்த நிலையில், ப்ராவோ டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, டி20 போட்டிகளில் 600 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.


கடந்த 11-ந் தேதி நடைபெற்ற டி20 லீக் போட்டியில் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணிக்கு எதிராக ப்ராவோ 2 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் ப்ராவோ 545 டி20 போட்டிகளில் ஆடி 600 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தார். அதிகபட்சமாக 23 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.




ப்ராவோ வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மட்டுமின்றி கரீப் பீர் லெவன், சென்னை சூப்பர் கிங்ஸ், சிட்டகாங் கிங்ஸ், தாகா டைனமிட்ஸ், டிஜே ப்ராவோ லெவன், டால்பின்ஸ், குஜராத் லயன்ஸ், மும்பை இந்தியன்ஸ், மராதா அரேபியன்ஸ், லாகூர் காலண்டர்ஸ், மெல்போர்ன் ரினெகெட்ஸ், நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ், ட்ரின்பாகா நைட் ரைடர்ஸ், பெஷாவர் ஜல்மீ, சர்ரே, செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பாட்ரியாட்ஸ் என உலகின் பல்வேறு நாடுகளிலும், ஏராளமான நாடுகளில் நடத்தப்பட்டு வரும் டி20 லீக் போட்டிகளில் ஆடியுள்ளார்.


தலைசிறந்த ஆல்ரவுண்டரான ப்ராவோ 545 டி20 போட்டிகளில் ஆடி 6 ஆயிரத்து 850 ரன்களை விளாசியுள்ளார். அவற்றில் 20 அரைசதங்கள் அடங்கும். டி20 கிரிக்கெட் போட்டிகளில் 300வது விக்கெட்டையும், 400 விக்கெட்டையும், 500வது விக்கெட்டையும் மற்றும் 600வது விக்கெட்டையும் முதன் முதலில் கைப்பற்றிய வீரர் என்ற அரிய சாதனையை ப்ராவோ தன்வசம் வைத்துள்ளார். 100வது மற்றும் 200வது விக்கெட்டை முதன்முதலில் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை டிர்க் நின்னஸ் தன்வசம் வைத்துள்ளார்.




ப்ராவோ 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 13 அரைசதங்கள் உள்பட 2 ஆயிரத்து 200 ரன்கள் சேர்த்துள்ளார். 164 போட்டிகளில் ஆடி 2 சதங்கள் 10 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 968 ரன்கள் எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 91 டி20 போட்டிகளில் ஆடி 1090 ரன்களை எடுத்துள்ளார். அவற்றில் 4 அரைசதங்கள் அடங்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான வீரரான ப்ராவோ 161 போட்டிகளில் ஆடி 1560 ரன்கள் எடுத்துள்ளார்.


சிறந்த ஆல்ரவுண்டரான ப்ராவோ டெஸ்ட் போட்டிகளில் 86 விக்கெட்டுகளையம், ஒருநாள் போட்டிகளில் 199 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 78 விக்கெட்டுகளையும், ஐ.பி.எல். போட்டிகளில் 183 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண