தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20 தொடரில் ஆடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த இமாலய இலக்கை 5 பந்துகள் மீதம் வைத்து தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை ஒடிசாவில் உள்ள கட்டாக்கில் நடைபெற உள்ளது.


இதற்காக கட்டாக்கில் உள்ள மைதானத்தில் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்கு கொரோனா கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளதால் கட்டாக் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் மைதானத்தில் கூடினர். மைதானத்தின் கேலரிகளில் குவிந்த ரசிகர்கள் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தனர்.






இதனால். உற்சாகமடைந்த இந்திய வீரர்கள் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக பயிற்சியின்போது பவுண்டரிகளும், சிக்ஸர்களும் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினர். குறிப்பாக, இந்திய அணியின் கேப்டன் ரிஷப்பண்டும், துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் சிக்ஸர்களை விளாசினார். இதைக்கண்ட ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர். அவர்களது ஆட்டத்தை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த சிக்ஸர் மழை நாளை போட்டியிலும் தொடர ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 






நாளை நடைபெறும் போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி ஆகும். முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்த இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் காயம் காரணமாக விலகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண