மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முல்தானில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.


இந்த போட்டியில் இரண்டாவது பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 279 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்தது. அப்போது, ஆட்டத்தின் 29வது ஓவரில் பீல்டிங் செய்து கொண்டிருந்த பாபர் அசாம் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானின் கீப்பிங் கிளவுசில் ஒன்றை வாங்கி அணிந்துகொண்டு பீல்டர் வீசிய பந்தை பிடித்தார்.




கிரிக்கெட் விதிகளின்படி பாபர் அசாம் செய்தது விதிமீறல் ஆகும். கிரிக்கெட் விதி 28.1ன் படி விக்கெட் கீப்பர் அல்லாத மற்றொரு ஆட்டக்காரர் கிளவுஸ் அணிவதற்கும், கால் காப்பு அணிவதற்கும் ( பாதுகாப்பு காரணமாக இருந்தாலும்) அம்பயரின் அனுமதி பெற வேண்டும். இல்லாவிட்டால் அது விதி மீறல் ஆகும்.  பாபர் அசாம் விதியை மீறியதால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 5 ரன்கள் இலவசமாக வழங்கப்பட்டது.


பாகிஸ்தான் அணிக்கு பெனால்டியாக 5 ரன்கள் விதிக்கப்பட்டாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியில் 120 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. முன்னதாக, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களின் 278 ரன்களை விளாசியது. இமாம் உல் ஹக் 72 ரன்களும், பாபர் அசாம் 77 ரன்களும் விளாசினர்.




இலக்டகை நோக்கி ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியில் கைல் மேயர்ஸ் 33 ரன்கள் மற்றும் ஷாமரா ப்ரூக்ஸ் 42 ரன்கள் விளாசினர். கேப்டன் நிகோலஸ் பூரண் 25 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் விளாசி ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 32.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு அவுட்டாகியது. இதனால், பாகிஸ்தான் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.


பாகிஸ்தான் அணி சார்பில் முகமது நவாஸ் 4 விக்கெட்டுகளையம், முகமது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஷதாப்கான் 2 விக்கெட்டையும், ஷாகின் அப்ரிடி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் போட்டிகளின்போது அடிக்கடி விதிகளை மீறுவதும் பின்னர் அதற்காக அபராதங்களோ அல்லது இதுபோன்ற பெனால்டியோ விதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண