மகளிருக்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் சர்வதேச தரவரிசை அடிப்படையில் அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. இதில், 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அதிரடி வெற்றி பெற்றது. அதனை அடுத்து இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டுள்ளது இந்திய அணி.
டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி பேட்டர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து நெருக்கடி தந்து இந்திய அணி. போட்டியின் மூன்றாவது ஓவரின்போது, பூஜா வஸ்த்ரக்கரின் துல்லிய த்ரோவால் ஓப்பனர் சூசி பேட்ஸ் 5 ரன்களுக்கு வெளியேறினார். இந்த ரன் அவுட் வீடியோ இப்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. துல்லியமாக பந்தை வீசிய பூஜா வஸ்த்ரக்கருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
வீடியோவை காண:
சூசி பேட்ஸை அடுத்து, வஸ்த்ரக்கர் கேப்டன் சோஃபி டிவைனின் விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். 35 ரன்கள் எடுத்திருந்த சோஃபி, வஸ்த்ரக்கரிடம் அவுட்டாகி வெளியேறினார். ஒன் டவுன் களமிறங்கி இருந்த அமிலியா கேர் அரை சதம் சிறப்பாக விளையாடி வந்தபோது, ஜேக்வாட் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறியுள்ளார். தொடர்ந்து நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
இந்தப் போட்டிக்கு பிறகு 10ஆம் தேதி நியூசிலாந்து அணியையும், 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியையும், 16ஆம் தேதி இங்கிலாந்து அணியையும் எதிர்கொள்கிறது. அதன்பின்னர் 19ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியையும், 22 ஆம் தேதி பங்களாதேஷ் அணியையும், 27ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியையும் எதிர்த்து விளையாடுகிறது. இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 8 அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதனால் அனைத்து அணிகளும் ஒரு முறை முதலில் மோதுகின்றன. அதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறும். இறுதி போட்டி வரும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்