ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலியா வென்ற நிலையில், அடுத்தடுத்து இரு போட்டிகளை இலங்கை வென்றது. இந்த நிலையில், இரு அணிகளும் நேற்று மோதிய 4வது போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 259 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடி வந்தார். அவர் களத்தில் இருந்தவரை ஆஸ்திரேலியாவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆட்டத்தின் 37வது ஓவரின் முதல் பந்தில் 99 ரன்களுடன் களத்தில் இருந்த டேவிட் வார்னர் சதமடிப்பார் என்று ஆஸ்திரேலியா ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஆனால், தனஞ்செய டி சில்வா வீசிய சுழலில் பந்துகளை உள்ளே வார்னர் தவறவிட்டதுடன் தடுமாறினர். கண்ணிமைக்கும் நேரத்தில் இலங்கை விக்கெட் கீப்பர் டிக்வெல்லா பந்துகளை பிடித்து ஸ்டம்பிங் செய்தார். இதனால், சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 99 ரன்களுடன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் வெளியேறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டேவிட் வார்னர் 6வது விக்கெட்டாக வெளியேறிய பிறகு பாட்கம்மின்ஸ் அதிரடியால் வெற்றியின் விளிம்பு வரை சென்ற ஆஸ்திரேலியா கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மேத்யூ தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால், 4 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது. மேலும், 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இலங்கை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. முன்னதாக, இலங்கை அணியின் அசலங்கா 110 ரன்கள் விளாசியும், தனஞ்செய டி சில்வா 60 ரன்கள் விளாசியும் இலங்கை 258 ரன்கள் குவிக்க உதவினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்