FICAவின்  (Federation of International Cricketers’ Association) முதல் பெண் தலைவராகிறார், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை லிசா ஸ்தாலேகர்.  நியூசிலாந்தில் உள்ள நியோனியில் நடைபெற்ற FICAவின் பொதுக்கூட்டத்தில் லிசா ஸ்தாலேகருக்கு இந்த பதவி வழங்கப்பட்டது. 2013-ஆம் ஆண்டில் மகளிர் உலக கோப்பையை இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


முதல் பெண் தலைவர்


சர்வதேச கிரிகெட் வீரர்கள் கூட்டமைப்பின் முதல் பெண் தலைவராக, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிகெட் வீராங்கனை லிசா ஸ்தாலேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கிரிகெட் அணியின் முன்னாள் வீரர் விக்ரம் சோலாங்கிற்கு அடுத்தபடியாக ஸ்தலேகர் கூட்டமைப்பின் தலைவராக பதவியேற்கவுள்ளார். சர்வதேச கிரிகெட் வீரர்கள் கூட்டமைப்பின் முதல் பெண் தலைவராக பதவியேற்கவுள்ள, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிகெட் வீராங்கனை லிசா ஸ்தாலேகர் கூறியது, கிரிகெட் ஒரு உலகளாவிய விளையாட்டு. இன்றைக்கு உலகம் முழுவதும் கிரிகெட் விளையாடப்பட்டு வருகிறது. கிரிகெட் அதற்கான பாதையில் மிகச் சிறப்பாக உலகம் முழுவதும் பயணித்து வருகிறது. இந்நிலையில் நான் இப்பதவியை ஏற்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 


மேலும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெண் மற்றும் ஆண் கிரிகெட் வீரர்களுக்கு, கிரிகெடில் புதிய மற்றும் அர்ரோக்கியமான வழிமுறைகளை கொண்டு வரவிருக்கிறோம். ஐசிசி-யுடன் இணைந்து வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், உறுதிப்படுத்தவும்  சர்வதேச கிரிகெட் வீரர்கள் கூட்டமைப்பின் சார்பாக அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 


லிசாவின் கிரிகெட் வாழ்க்கை


2001 முதல் 2013 வரை சர்வதேச கிரிகெட்டில் வளம் வந்த லிசா ஸ்தாலேகர் மிகச் சிறப்பான உலகத் தரம் வாய்ந்த வீரர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வந்துள்ளார். அவ்வகையில், ஆஸ்திரேலியாவின் கேப்டனாக எட்டு டெஸ்ட், 124 ஒருநாள் போட்டி மற்றும் 54 டி-20 போட்டிகளில் மிகச் சிறப்பாக வழி நடத்தியுள்ளார். 2013 உலகக்கோப்பை வென்றது மட்டும் இல்லாமல்,  2005ல்  தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்ற டி-20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கிய வீரராகவும் அணியின் பலமான வீரராகவும் இருந்துள்ளார். 


லிசா 2007 மற்றும் 2008ல் கிரிகெட் வீரர்களில் மிகவும் மதிப்புமிக்க வீரர்களுக்கான விருதான பெலிண்டா கிளார்க் எனும் விருதினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண