2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் தனது ஓய்வை அறிவித்தார். நீண்ட நெடிய 24 வருட கிரிக்கெட் பயணத்தில் 600கும் அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடி, வெற்றி தோல்வி என அனைத்தையும் பார்த்துள்ள சச்சினின் முதல் நேர்காணல் வீடியோவில் என்ன பேசி இருப்பார் என்பதை பற்றி பார்ப்போம்.


சச்சினின் முதல் நேர்காணலை எடுத்தவர் நடிகர் டாம் ஆல்டர். அப்போது சச்சினின் வயது 15. 1989-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி மும்பையில் இந்த நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணல் சச்சினின் மனதிற்கும் மிக நெருக்கமானது. இது குறித்து பின்னாளில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






அந்த முதல் நேர்காணலில், டாம் ஆல்டர் சச்சினிடம் “ஒரு வேளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட தேர்வாகிவிட்டால் உன்னுடைய மனநிலை எப்படி இருக்கும்? அல்லது இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்கலாம் என நினைப்பாயா?” என கேட்டதற்கு ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லி வந்த சச்சின், “இதுவே ஆரம்பம் என நினைக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார். அந்த தருணத்தில் இருந்து கிரிக்கெட்டில் அவர் விளையாடி சாதித்து ஓய்வு பெற்றது வரை, இன்றும் என்றும் சச்சினுக்கு நிகர் சச்சினே!


கிரிக்கெட் என்னும் விளையாட்டின் கடவுள் என்று போற்றப்படும் ஒரு நபர் - இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இந்தியா மட்டுமில்லை, இவருக்கு உலகெங்கிலும் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் உண்டு. அதற்கு முக்கிய  காரணம் இவரின் பேட்டிங் ராஜபாட்டை. ஒருநாள் போட்டிகளில் 18.463 ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்கள் என சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 34,000 ரன்களை விளாசியுள்ளார். மேலும் சதத்திலேயே சதம் அடித்தும் சச்சின் சாதனை படைத்தவர். இப்படி சச்சின் கிரிக்கெட் உலகில் செய்துள்ள சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் 32 ஆண்டுக்கால பழைய நேர்காணலை திரும்பி பார்த்ததில் சச்சின் மட்டுமல்ல, சச்சின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியே!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண