கிரிக்கெட் உலகின் அழகான தம்பதிகளாக எப்போதும் உலா வருபவர் விராட் கோலி – அனுஷ்கா. கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக உலா வரும் விராட் கோலிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


அனுஷ்காவுடன் உலா வரும் விராட் கோலி:


இதன் காரணமாக அனைத்து அணிகளும் அமெரிக்காவில் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி அமெரிக்காவில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து உலா வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் வீதியில் நடந்து சென்று காரில் ஏறுகின்றனர்.





டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நியூயார்க் நகரத்தில் நடைபெறுகிறது.


இந்தியா - பாகிஸ்தான் மோதல்:


இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவுடனான முதல் போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களமிறங்குகிறது.


கடந்த போட்டியில் அயர்லாந்தை எளிதில் வீழ்த்தியிருந்தாலும் இந்திய அணி முழு பலத்துடன் இந்த போட்டியில் ஆட வேண்டியது அவசியம் ஆகும். ஷாகின் அப்ரிடி, அமீர், ஹாரிஷ் ராஃப், நசீம்ஷா ஆகியோரின் பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வாறு சமாளிக்கப்போகிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.


அதேபோல, இந்திய அணியின் பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் வேகத்தையும், குல்தீப் யாதவ், ஜடேஜா, அக்‌ஷர் படேல் சுழலை எவ்வாறு சமாளிக்கப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி எப்போதும் மறக்க முடியாத போட்டியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க: Saurabh Netravalkar: பாகிஸ்தானை மிரட்டிய இந்திய வம்சாவளி..ஐடியில் வேலை பார்த்துக்கொண்டே விளையாடுவது எப்படி தெரியுமா?


மேலும் படிக்க: T20 WC IND vs PAK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நேருக்கு நேர் மோதும் இந்தியா - பாகிஸ்தான்! வெற்றி யாருக்கு?