வேலை பார்த்துக்கொண்டே எப்படி கிரிக்கெட் விளையாட முடிகிறது என்பது தொடர்பாக அமெரிக்க கிரிக்கெட் வீரர் சௌரப் நேத்ரவல்கர் பேசியுள்ளார்.


டி20 உலகக் கோப்பை:


விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 போட்டியில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தாவர் அமெரிக்க கிரிக்கெட் வீரர் சௌரப் நேத்ரவல்கர். இவர் வீசிய சூப்பர் ஓவர் மூலம் தான் அமெரிக்க அணி வெற்றியடைந்தது.


மும்பையை பூர்வீகமாக கொண்ட சௌரப் நேத்ரவல்கர் அமெரிக்காவிற்கு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மாஸ்டர்ஸ் படிப்பிற்கு சென்றவர்.  பின்னர் அமெரிக்க அணியில் இடம் பெற்று இப்போது அந்த அணியின் முக்கியமான வீரராக மாறியிருக்கிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியில் விளையாடியவர்.


2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இவர் 5 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதேபோல் பாகிஸ்தான் அணி வீரர் அகமது சேஷத் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.


வேலை பார்த்துக்கொண்டே எப்படி கிரிக்கெட் விளையாட முடிகிறது?


இச்சூழலில் வேலை பார்த்துக்கொண்டே எப்படி கிரிக்கெட் விளையாட முடிகிறது என்பது தொடர்பாக சௌரப் நேத்ரவல்கர் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “கிரிக்கெட்டையும் அலுவலகப் பணியும் சேர்ந்து பார்ப்பதில் எனக்கு எந்த வித அழுத்தமும் நெருக்கடியும் ஏற்பட்டது இல்லை. ஒரு விஷயத்தை நீங்கள் விரும்பி செய்தால் அது உங்களுக்கு ஒரு வேலையாகவே தெரியாது”என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர்,” நான் களத்தில் இருக்கும்போது பந்து வீசுவது மற்றும் பேட்ஸ்மேன்களை எப்படி ஆட்டம் இழக்க வைப்பது என்பது குறித்து யோசித்துக்கொண்டிருப்பேன். இதே போல் நான் ஐடி பணியில் இருக்கும்போது எவ்வாறு கோடிங் செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிப்பேன். எனவே இது இரண்டையும் செய்யும் போது எனக்கு வேலை செய்கிறோம் என்ற எண்ணமே இருக்காது.


அது மட்டுமல்லாமல் என்னுடைய ஐடி தொழிலில் உரிமையாளர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள். நான் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக செல்லும்போது என்னை அங்கிருந்து பணி செய்ய அனுமதிப்பார்கள். மேலும் போட்டி நாளன்று நான் பணி செய்வதிலிருந்து எனக்கு அவர்கள் விலக்கு அளிப்பார்கள்” என்று கூறியுள்ளார் சௌரப் நேத்ரவல்கர்.


மேலும் படிக்க: CAN vs IRE: டி20 உலகக் கோப்பை போட்டியில் மற்றொரு அதிர்ச்சிகர சம்பவம்! அயர்லாந்தை அலறவிட்ட கனடா..!


மேலும் படிக்க: உலக கோப்பை T20 கிரிக்கெட் போட்டியை காண ஏர்டெல் அறிவித்த சிறப்பு திட்டம் என்ன?